தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday, 13 January 2017

       கடலூர் மாவட்ட  சங்கங்களின்

பாராட்டுதல்களும்நன்றியும்
 





அன்பான தோழர்களே !

       மனம் நிறைவாய் இருக்கிறது அனைவரும் பாராட்டும்படியான நினைவில் நிலைநிற்கும் ஒரு கருத்தரங்கத்தை நடத்தி முடித்திருக்கிறோம்.

       இதன் வெற்றிக்குப் பாடுபட்ட ஒவ்வொரு தோழர்களுக்கும்    நமது நன்றியையும்பாராட்டுதல்களையும் உரித்தாக்குகிறோம்.

       நிதி திரட்ட உழைத்தவர்கள் தங்கள் சொந்தப் பணிகளைத்   தள்ளி வைத்துஉடலால் உழைப்பை நல்கியவர்கள் ஊழியர்களைத் திரட்டியவர்கள் எனஒவ்வொருவரையும் தனித்தனியே போற்றிப்   புகழத் தக்க பணியைஆற்றியிருக்கிறீர்கள்.

       நிதி திரட்டியது மட்டுமல்லாமல்,மளிகைப் பொருட்கள், அரிசி மூட்டை,வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு,தண்ணீர் பாட்டில் என தாராளமாகபொறுப்பேற்றுக் கொண்டீர்கள், நன்றி  தோழர் களே !

 முதல் நாள் இரவு உணவு காலைச்    சிற்றுண்டி,   முற்பகல் வடை தேனீர், மதியம்சுவையான அசைவ உணவு என   ஒவ்வொன்றும் அருமை என தமிழகம்முழுவதிலிமிருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் பாராட்டினார்கள் என்றால் அந்தப்பாராட்டு முழுவதும் நம் தோழர்களை –--குறிப்பாக,   கீழே   குறிப்பிடப்படும் தோழர்களையே—--சேரும் வாழ்த்துக்கள் தோழர்களே!

நன்றிக்குரிய நம் தோழர்கள்

       A.S. குரு பிரசாத் மாவட்ட அலுவலகம், கடலூர்
       R. குணசேகரன்,            --- do---
       K. செல்வராஜ், நெல்லிக்குப்பம்
       K. குமார் செஞ்சி
       P. குமார், நெல்லிக்குப்பம்
       V. இளங்கோவன், அரகண்ட நல்லூர்
       S. இராஜேந்திரன், மாவட்ட அலுவலகம், கடலூர்
       D. குழந்தைநாதன், கடலூர்
       S. வெங்கட், பரங்கிப்பேட்டை
       A. பீட்டர், நெல்லிக்குப்பம்
       V. கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்
       R. நந்தகுமார், பண்ருட்டி
       R. சுப்பிரமணியன், கடலூர்
       A.C.முகுந்தன், கடலூர்
       இறுதியாக, கருத்தரங்கம் வெற்றி பெறுவதற்கு நிதி அளித்த அனைத்துஅதிகாரிகள், தோழமைச் சங்க நண்பர்கள் மற்றும் நமது சங்கத் தோழர்கள்அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்!
       நெடுந்தொலைவிலிருந்தும் மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாதுகாலத்தே வந்திருந்து பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிநன்றி நன்றி!
வாழ்த்துகளுடன்,

தோழமையுள்ள
மாவட்டத் தலைவர் / மாவட்டச் செயலர்
NFTE             TMTCLU
கடலூர் மாவட்டச் சங்கங்கள்


No comments:

Post a Comment