தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday, 30 June 2015


தமிழ் மாநில நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்க்கு அடையாள அட்டை , மாதம் தோறும் 7 ல் சம்பளம் ,EPF ESI  கண்காணிப்பு குறித்த வழிகாட்டுதல் கடிதத்தை  மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது 

 Letter to SSA Heads on the Contract Labour Issues discussed.. ID cards within 2 months, Payment before 7th of every month, EPF/ESI Remittance Monitoring, Issue of E Passbook

Monday, 22 June 2015

சிதம்பரம் கேபிள் பழுது


சிதம்பரம் நகர பகுதியில் நகராட்சி கழிவு நீர் வாய்க்கால் தோண்டும் போது  நமது 1600 pair அளவுகொண்ட கேபிள் துண்டிக்கப்பட்டு பல தொலைபேசி இணைப்புகள் செயல் இழந்தன. நிர்வாகம் உடனடியாக சரிசெய்யும் பணியை துவங்கியது. சரி செய்யும் பணியில் (21-6-2015) ஞாயிறு விடுமுறை நாளென்றும் பாராமல் நமது ஒப்பந்த ஊழியர்கள் தோழர்கள் சத்யராஜ், மதி,நாகராஜன் ஆகிய மூன்று பேர் மற்றும் அந்த பகுதி டெலிகாம் மெக்கானிக் தோழர்.T.ராஜேந்திரன்  ஆகியோர்  கேபிள் ஜாயின்ட் பணியில் ஈடுபட்டு சரிசெய்தனர். இத் தோழர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். (1600 pair அளவு கொண்ட இக் கேபிள் ஒரு சில இடங்களில் மட்டுமே போடப்பட்டிருக்கும். இக் கேபிள் தற்போது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்           திரு.பன்னீர்செல்வம், SDE அவர்கள் முயற்சியில் போடப்பட்டது)
  
இப்பகுதியில் கேபிள் பகுதியில் பணிபுரிவதற்கு ஏற்கனவே மேலும் சில ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகத்திடம் கோரியிருந்தோம். ஆனால் நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்கவில்லை. இது போன்ற அவசர காலத்தில் கூடுதலாக பணிபுரிவதற்கு ஏதுவாக இருந்திருக்கும். இருப்பினும் குறைந்த ஒப்பந்த ஊழியர்களை கொண்டே கேபிள் பழுதை சரிசெய்துள்ளனர்நமது வாழ்த்துக்கள்

நிர்வாகம் இனியாவது கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் என நம்புகிறோம்!!!Saturday, 13 June 2015


மாநில உயர்மட்ட நிர்வாகத்துடன் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்காக நீண்டதொரு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தொழிலாளர் நலனுக்குரிய நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டிய அவசரம் அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் சராசரியாக நிர்வாகம் செலவிடும் ரூ 325ல் 195 கூட காலத்தில் தொழிலாளர்களுக்கு போய்சேரவில்லை என்கிற விழிப்புணர்வு உருவாக்கப்பட்டுள்ளது.கம்பெனியின் நிதி ஆதாரம் விரயமாவதை- கொள்ளைப்போவதை தடுத்திடவேண்டும் என்ற உணர்வு மேலோங்கிட செய்யப்பட்டுள்ளது. நமது இருதரப்பு பேச்சுவார்த்தை , சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் தலமட்ட உழைப்பவர்களுக்கு உரிய பலனை தரும் என எதிர்பார்க்கிறோம்.ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி

Friday, 12 June 2015

தோழர்,செல்வம் அவர்களின் 
இல்லத்திருமண நிகழ்ச்சி

நமது மாவட்டத்தலைவரும், TMTCLU மாநில பொதுச்செயலருமான தோழர்.R.செல்வம் அவர்களின் இளைய புதல்வி செல்வி. S.லாவண்யா திருமண நிகழ்ச்சி கடலூர் நெல்லிக்குப்பம் சுகம் திருமணமண்டபத்தில் 4-6-2015 அன்று நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி மாநில செயலர் தோழர்.பட்டாபி, மூத்தத் தோழர்.K.சேது, அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ், சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமன், மாநில துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன், மாநில உதவிச்செயலர்கள் தோழர்கள். P.சென்னகேசவன்,K.நடராஜன், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன், தஞ்சை TMTCLU முன்னாள் மாவட்ட செயலர் தோழர்,கிள்ளிவளவன், தஞ்சை TMTCLU மாவட்ட செயலர் தோழர்.கலைச்செல்வன், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள்-தோழர்கள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற மூத்த தோழர்கள், ஒப்பந்த ஊழியர் சங்க தோழர்கள், மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து பல தோழர்களும், தோழியர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.

காரைக்குடி

நீண்ட நாள் கோரிக்கை 
நிறைவேறியது...
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்புச்செயலர்
தோழர்.மாரிமுத்து தனது மனைவி திருமதி.மஞ்சுளாவுடன்
ESI அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் காட்சி. 

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
MALLI SECURITY  என்னும் நிறுவனத்தின் குத்தகையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ESIC  மருத்துவ அட்டை வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும்  பணி நேற்று நடந்து முடிந்தது. 
ESI அலுவலகத்திலிருந்து நேரடியாக ஊழியர்கள் வந்திருந்தனர். 
ON LINE முறையில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யப்பட்டு உடனடியாக ESI இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
குத்தகை நிறுவனம் ஏற்கனவே தனது ஊழியர்களின் விவரங்களை  
ESI இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது.

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலத்திற்கு அடுத்த தெருவிலேயே 
ESI  மருந்தகம் இருந்தும் அடையாள அட்டை வழங்கப்படாததால் அந்த வசதியை ஊழியர்கள் பயன்படுத்த இயலவில்லை.  ESI மருத்துவ அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மிக நீண்ட நாட்களாக எழுப்பி வந்தோம். தற்போதுதான் அது நடந்தேறியுள்ளது. 

விடுபட்டவர்கள் நேரடியாக மதுரை ESI  அலுவலகத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் ஒப்பந்தகாரரிடம் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் பெற்று அதில் புகைப்படம் ஒட்டி விவரங்களை நிரப்பி 
நிரந்தர அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

MALLI SECURITY  தவிர 
ALERT SECURITY மற்றும் CLEAN CARE SERVICES 
ஆகிய நிறுவனங்களும் காரைக்குடியில் குத்தகை எடுத்துள்ளன. அவர்களின் கீழ் பணிபுரியும் தோழர்களுக்கும் அடையாள அட்டை  வழங்குவதற்கான நமது முயற்சி தொடரும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு விரைவில் அடையாள அட்டையும், 
EPF கணக்கிற்கான UAN  என்னும் UNIVERSAL ACCOUNT NUMBERம் வழங்கப்பட வேண்டும் என குத்தகைக்காரரிடம் வலியுறுத்தியுள்ளோம். 
இம்மாதமே மேற்கண்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க  
குத்தகைக்காரர் உறுதி அளித்துள்ளார்.


Monday, 8 June 2015

போராட்டம் ஒத்திவைப்பு
ஒப்பந்த ஊழியர்களுக்கான பிரச்சினைகளை வலியுறுத்தி 10-06-2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த பெருந்திரள் தர்ணா போராட்டம் இன்று 
(8-5-2015) நடைபெற்ற மாநில முதன்மைப் பொதுமேலாளர் உடனான மாநில செயலர்களின்   முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட  சில முன்னேற்றத்தின் அடிப்படையில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை ஜூன்-12 அன்று நடைபெறுகிறது.

Tuesday, 2 June 2015ஒப்பந்த ஊழியர்க்கு காலத்தே ஊதியம் வழங்கிட வேண்டும் 
EPF /ESI  ஒப்பந்தகாரரரால்
 முறையே செலுத்த படுகிறதா 
என்பது கவனமாக கண்காணிக்கபடவேண்டும் . ஒப்பந்த ஊழியர் குறித்த CORPORATE  உத்தரவுகள் தீவிரமாக கடைபிடிக்க 
வலியுறுத்தி மாநில நிர்வாகம் 
மாவட்ட நிர்வாகங்களுக்கு வலியுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது . கடிதம் காண இங்கு சொடுக்கவும்