தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday, 1 June 2018

தோழியர் J.ஜோதி (தற்காலிக ஊழியர்)
பணி ஓய்வு பாராட்டு விழா - கடலூர்
           நமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து இம்மாத  பணி ஓய்வு பெறும் தோழியர் J.ஜோதி அவர்கள் பணி ஓய்வு பெறவுள்ளார். அவரது 30ஆண்டு கால இலாகா சேவையினை பாராட்டும் விதமாக நமது TMTCLU கடலூர் கிளைச் சங்கத்தின் சார்பில் கிளைத் தலைவர் தோழர் P.சுந்தர்ராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார். NFTE மாவட்டத் தலைவர் தோழர் G.கனேசன் , TMTCLU பொதுச் செயலர் தோழர் R.செல்வம், TMTCLU மாவட்ட செயலர் தோழர் A.S.குருபிரசாத், மாவட்ட தலைவர் தோழர்  M.S.குமார், NFTE  மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன்,  வெளிபுறப்பகுதி கிளைச் செயலர் தோழர் E.வி நாயகமூர்த்தி, பொது மேலாளர் அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன், மூத்த தோழர் சு.தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
          இறுதியாக நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தமது உரையில் தோழியரின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் தோழியரின் பணி நிரந்திர சம்மந்தமாக  வழக்கு  நீதிமன்றத்தில்  இருப்பதனால் மிக விரைவில்  முடித்து தருவதற்கு நமது சங்கம் உறுதுணையாக இருக்கும். அதே போல் தோழியருக்கு கிடைக்க வேண்டிய EPF பணம் கிடைக்கவும்  நாம் ஏற்பாடு செய்து தருவோம்  என நம்பிக்கை தந்து  தமது சிறப்புரையினை நிறைவு செய்தார்.
          இறுதியாக தோழர் M.மணிகண்டன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது. கூட்ட்த்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திட்ட திண்டிவனம் தோழரும் NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் S.குமார் அவர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
          பணி ஓய்வு பெறும் தோழியருக்கு தாரளமாக நிதியுதவி அளித்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு NFTE-TMTCLU  மாவட்ட சங்கங்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி
                                                                                                                                                                                                                                                             தோழமையுடன்
                                                                                      NFTE-TMTCLU ,

                                                                           மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.


கன்டன ஆர்ப்பாட்டம் - கடலூர்
            தூத்துக்குடியில் தன் மக்களின் நலனுக்காக 100 நாட்கள் அறவழியில் போராடிய அப்பாவி பொது மக்களின் மீது  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் BSNLலிலுள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 25-05-2018 அன்று மதிய உணவு இடைவேளையின் போது நடந்தத்து.
          அதில் நமது அனைத்து சங்கத் தோழர்கள் இறந்த போனவர்களுக்கு அஞ்சலியையும், துப்பாக்கி சூடு நடத்தியதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்ததது. கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள்

          கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பல...  


Wednesday, 16 May 2018


வருந்துகிறோம்
நமது ஈரோடு மாவட்டம் கவுந்தம்பட்டி தொலைபேசி நிலைத்தில் பணிபுரியும்  தோழியர் திலகவதி ஒப்பந்த ஊழியர்  அவர்கள் 15-05-2018 அன்று  இயற்கை எய்தினார் என்பதனை ஆழந்த வருத்த்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது மாநிலச் சங்கத்திற்கு சார்பாக நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம். தோழியரின் கணவர் ஒரு வருடத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..
தோழியரின் குடும்பத்திற்கு நம்மால் இயன்ற உதவியை செய்வோம்... 

                                                                                                                                                                                                                                                       வருத்தத்துடன்
                                                                                                 R.செல்வம்
                                                                                   மாநிலச் செயலர்,
             TMTCLU

Sunday, 1 April 2018

வருந்துகிறோம்

நமது மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் அவர்களின் தாயார் இன்று (02-04-2018 ) காலை இயற்கை  எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு  நமது மாவட்ட சங்கங்களின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் 03-04-2018 அன்று அவரது சொந்த ஊரான  திருவாரூர் வடக்கு வீதி , முதலியார் தெருவிலுள்ள அவரது இல்லத்திலிருந்து       காலை 10.00மணியளவில் புறப்பட்டு  சென்று நல்லடக்கம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
                                                                                       BY
NFTE-TMTCLU

   மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.

Wednesday, 7 March 2018

மகளீர் தின
வாழ்த்துக்கள்

பாசத்தில் தங்கையாகவும்...
உணர்வில் தோழியாகவும்...
நேசத்தில் துணைவியாகவும்...
உயிர் கொடுப்பதில் அன்னையாகவும்...
இப்படி பல்வேறு பரினாமங்களை     தன்னுள் அடக்கி வாழும்
பெண்மையை போற்றுவோம்...
அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்களுடன்

 NFTE-TMTCLU மாவட்ட சங்கங்கள்,

Friday, 16 February 2018

NFTE – TMTCLU
மாநிலச் சங்கச் சிறப்பாய்வு கருத்துக் கேட்பு கூட்டம்

            நமது தமிழ்மாநிலத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநில அளவிலான சிறப்பு அமர்வு 14—02—2018ல் சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுசேலம் தோழர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 10 மணிக்குத் துவங்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுமையிலிருந்தும் வந்திருந்த TMTCLU மற்றும்  NfTE சங்கத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக் கடலூர் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் A.S. குருபிரசாத் வரவேற்றார். அதனை தொடர்ந்து சிதம்பரம் கிளைச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன் அஞ்சலியுரையாற்றினார்.
       மாநிலப்பொருளாளர் தோழர் எம். விஜய் ஆரோக்கியராஜ் சிறப்புக் கூட்டத்திற்கான அவசரத் தேவை மற்றும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளின் கடுமையை விவரித்தார்அதை எதிர்கொள்ள பலமான அமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த அமைப்பின் நிதி நிலமை பலமானதாக இருக்க வேண்டியதும் மிகமிக அவசியம் என்பதை விவரித்துக் கூறினார்எனவே நமது சங்கத்தின் நிதிநிலமையை நாம் விரும்புகின்ற அளவு முன்னேற்ற சந்தா முறைப்படுத்தல் உடனடிக் கடமையாகக் கொள்ள வேண்டும்தோழர்களும் தாமே முன்வந்து சந்தா செலுத்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
       மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் ஆர். செல்வம் கூட்டத்திற்கான ஆய்படு பொருளை அறிமுகம் செய்தபின், NFTE மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் BSNL நிர்வாகம் நிதி நெருக்கடி காரணமாக, சிக்கன நடவடிக்கையாகஒப்பந்த முறையிலான செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு செய்ய, ஒப்பந்த முறைப் பணிகளைச் சீரமைப்பு செய்ய எண்ணுகிறதுஇது எதார்த்தமாக நம்முன் உள்ள நிலமை. இதனை ஏற்க முடியாது என ஒற்றைவரியில் நாம் சொல்லிவிட முடியாதுமாறாக, ஆட்குறைப்பை அதிக பாதிப்பு இல்லாமல், அதிகபட்சமான தொழிலாளர்களின் பணியை உறுதி செய்கின்ற வகையில் நாம் திட்டமிட வேண்டும்அதனை ஆலோசிப்பதற்காகவே நாம் இங்கு கூடியிருக் கின்றோம்நிச்சயமாக வெற்றிகரமாக இதனைக் கையாள்வோம் என உறுதிபடக் கூறினார்.
       அதன்பின்னர் 12 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் சுருக்கமாக தங்கள் கருத்துகளை நேர்த்தியாக எடுத்துக் கூறினர்
       அதனையடுத்து தஞ்சை NFTE மாவட்டச் செயலாளர் தோழர் கிள்ளிவளவன் தங்கள் பகுதி நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்கள் அதிகம் எனக் கூறி வருகிறதுஅதனை உரிய வழியில் சரிசெய்து நமது தொழிலாளர்களைப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும் என்றுரைத்தார்.
       கடலூர் NFTE மாவட்டச் செயலாளர் தோழர் இரா.ஸ்ரீதர் தமிழ் மாநிலச் சங்கம் அங்கீகரித்த  ( TMTCLU) ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயல்பாட்டிற்கு கடலூர் மாவட்டச் சங்கம் உறுதுணையாக இருக்கும் என உறுதி கூறினார்.
       தோழர்களின் கருத்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (தீர்மானங்கள் தனியே)
       நிறைவுரையாக NFTE மாநிலச் செயலாளர் அருமைத் தோழர் கே. நடராஜன் அவர்கள் பேசும் போது, TMTCLU மாநிலச் சங்கம் தோழர் ஆர். செல்வம் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறார் எனப் பாராட்டு தெரிவித்தார். TMTCLU மாநிலச் சங்கம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் NFTE  மாநிலச் சங்கமும் மத்திய சங்கமும் உறுதுணையாக நிற்கும் என அறிவித்தார்மேலும், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு மாறாகவோ அல்லது மாநில நிர்வாகத் தலைமை மாறும்போது நிலமை கடுமையாகுமென்றால் நிச்சயம் போராடித் தொழிலாளர் நலம் காப்போம் எனச் சூளுரைத்தார்
       இறுதியாக, மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஆர். செல்வம் தொகுத்து உரையாற்றினார்அவர் தமது தொகுப்புரையில் NFTE மாநிலச் சங்கத்தோடு இணைந்து பணியாற்றுவதால் நம்மால் சாதிக்க முடிகிறதுநமது மாநிலச் சங்கத்தின் சார்பில் சமவேலைக்குச் சம ஊதியம், ஊதியத்துடன் கூடிய வாராந்திர ஓய்வு முதலிய வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. சாதகமானத் தீர்ப்பு வரும் என நம்புகிறோம்மாநில நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பல சாதகமான மாறுதல்களைச் செய்து வருகிறோம்நமக்குத் தேவை ஒற்றுமைமேலும் ஊழியர்களை நமது சங்கத்தின் பால் திரட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சிறப்புக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த சிதம்பரம் தோழர்களுக்கு நன்றி கூறினார். குறிப்பாக காலை மாலை தேனீர் வழங்கிய சிதம்பரம் தோழர்களுக்கும் மதிய உணவு வழங்கிய தோழர் இரா ஸ்ரீதர் அவர்களுக்கும் நன்றி கூறினார்.
       இறுதியில் சிதம்பரம் NFTE கிளைச் செயலாளர் தோழர் V. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூற கருத்தாய்வுக் கூட்டம் நிறைவடைந்தது.

தீர்மானங்கள் :
  • 1.   ஒப்பந்தத் தொழிலாளர் ஊதியப் பிரச்சனைக்கு BSNLEU சங்கத்துடன் இணைந்து போராடி மாதாந்திர ஊதியத்தை உறுதிப்படுத்திய மாநிலச் சங்கத்திற்கு நன்றி.

  • 2.  அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கம் BSNL நோடல் அதிகாரி கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.

  • 3.         TMTCLU மாநில மாநாட்டை மே மாதத்தில் நடத்துவது .

  • 4. ஒப்பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பைத் தன்னிச்சையாக நடைமுறைப் படுத்துவதைத் தடுத்து நிறுத்திஅதற்கு மாறாகNFTE  மாநிலச் சங்கம் வழங்கிய வழிகாட்டலைச் சரியானது என ஏற்றுக் கொள்வது.

  • 5.   பணித் தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.


  • 6.   சிறப்புக் கூட்டம் நடத்த உதவிய கடலூர் மாவட்டச் சங்கங்களுக்கும் சிதம்பரம் கிளைக்கும் நன்றி பாராட்டுதல்