தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 20 November 2018

NFTE - TMTCLU
கடலூர் மாவட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து NFTE TMTCLU  சார்பில் 17.11.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர்வாகம்  ஒப்பந்தக்காரை உடணடியாக ஊதியம் வழங்க உத்திரவிட்டது . ஒப்பந்தக்காரர்  (20-11-2018 ) இன்று நமது மாவட்டத்தில் அணைத்து தோழர்களுக்கும் முதல் தவணையாக ரூபாய் 5000 /- வழங்கியுள்ளார்.

இருப்பினும் நமது மாவட்ட சங்கம் முழுமையான ஊதியம் வழங்க வேண்டமென்றும், 2009க்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் எனவும், விடுப்பட்ட தோழர்களை பணியமர்த்த வேண்டியும் வரும்   22-11-2018 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டமும், 28-11-2018 அன்று கடலூர் பொது மேலாளர் அலுவலக முன்பாக மாபெரும் தர்ணா நடைபெறும்.

ஆகவே நமது உரிமையை நிலைநாட்டிட!....
ஒன்றுபட்டு போராடிடுவோம்!...
வெற்றி பெறுவோம்!...
         
தோழமையுடன்
NFTE-TMTCLU

                                                          மாவட்டச் சங்கங்கங்கள்
                                                                        கடலூர்  
புயல் பாதிப்புதுயர் துடைக்க முன்வருவீர்!


அன்புள்ள தோழர்களே, தோழியர்களே!
            வணக்கம்நாம் தான் எதிர்பார்த்தோம், நம்மைத் தேடி வருமென்று!   தயாராகக் கூட இருந்தோம். அனுபவப்பட்டவர்களாயிற்றே!    கஜா புயல் குறித்துத்தான் இந்த வேண்டுகோள்!
          தானே தந்த துயரம் தலைமுறையும் மறவாது.  ‘கேட்டிலும் நன்மை உண்டு என்பார் வள்ளுவர்அல்லலுற்று கையறுநிலையில் இருக்கும் போதுகை கொடுப்பார் யார்? கண்ணீர் துடைப்பார் எவர்? வாரி வழங்கா விடினும், ஆறுதலாய் ஒருசொல் கூறவோர் மனிதருண்டோ?
           மனித மனங்கள் பதறுரும்அதை நாம் அனுபவித்திருக்கிறோம் …  அது மட்டுமாமனிதம் இன்னும் மாண்டுவிடவில்லை என்று உதவிக்கரங்கள் ஓடோடி வந்தனபாலம் கட்டுவதாய் பெரும் பணி, அணிலாய் அதில் சிறு பங்கு எனகுடந்தை, தஞ்சை, கோவை, காரைக்குடி, சேலம்  என  தோழர்கள் நிவாரணப் பொருட்களோடு வந்தார்களே …   நம் நெஞ்சை எல்லாம் நிறைத்தார்களே...

                தமிழகத்திற்கே சோறிடும் சேற்று பூமியாம் காவிரிப்படுகை மாவட்டங்கள் இன்றுகஜா புயலடித்து ஓய்ந்த பின்னும்புயலின் பாதிப்பிலிருந்து மீளாதிருக்கின்றனர்தஞ்சை விவசாயிகளின் கவலைஆச்சரியப்பட வைக்கிறது.
                வள்ளுவர் வாழ்த்திய விவசாயியல்லவா, என் பசிக்கு இன்று யார் தருவார் என்பது அவர்கள் கவலை யில்லையாம். . . நாளை தமிழகம் அரிசி இன்றி பசியால் வாடுமோபுயலால் இந்த போகம் போனதேபோன கரண்டு இன்னும் வரலையே . . . எப்படிப் பயிர் வைப்பேன்வானம் பார்த்து ஓங்கிய தென்னை போர்க்களத்து வீரர்களாய் முறிந்து போனதுவே …  மகிழ்வைக் கூட்டும் குடந்தையின் வெற்றிலைக் கொடிக்கால்கள் நாசமானதுவேஎன    அழுவது அல்ல, எழுவது என்று அவர்கள் மனத்தளவில் தயாராகி விட்டார்கள்
நாம் என்ன செய்யப் போகிறோம்?
                புயல் காணா புதுக்கோட்டை, வேதாரண்யம், இராமநாதபுரம் என புதிது புதிதாய்  இடங்களைத் தேடி புயல் புரட்டிப் போட்டு விட்டு சென்றுள்ளது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?
கோவையில் நடைபெற்ற நமது மாநிலச் செயற்குழுவில் இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டபோது –       உங்களின் உதவும் கரங்களை நம்பி --      பிறர் துயர் காணச் சகியாத நெஞ்சின் ஈரம் எண்ணி--   நமது மாவட்டச் சங்கத்தின் சார்பில் புயல் நிவாரண நிதியாக          முதல் தவணை   தொகை  ரூபாய் பத்தாயிரம்  ரூ10,000/--                 வழங்கி உள்ளோம்.                விரைந்து உங்கள் பங்கைச் செலுத்துங்கள் எனத் தோழமையோடு  வேண்டுகிறோம் !
            கூடுதலாக நிதி திரண்டி, இரண்டாம் தவணையைத் தந்திடுவோம்!
            புயலெனப் புறப்படுங்கள் !   மழையெனப் பொழியுங்கள்,  நன்கொடைகளை !!
 எவ்வளவு வழங்கினாலும் நமது உள்ளம் திருப்தியுறாதுஏனெனில் கைமடங்கா விவசாயிகள் கை ஒடிந்து உள்ளார்கள்.   நமது நெஞ்சம் சற்றே அமைதியுற அள்ளித் தாருங்கள் எனத்

தோழமையோடு வேண்டும்,
 G. கணேசன்                       A.S. குருபிரசாத்                    இரா. ஸ்ரீதர்

                     மாவட்டத் தலைவர்                  மாவட்டப் பொருளாளர்            மாவட்டச் செயலாளர்

Thursday 15 November 2018

சம வேலைக்கு சம ஊதியமும்
                    உச்ச நீதிமன்ற தீர்ப்பும்

அன்புள்ள தோழர்களே வணக்கம்!..
   சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரண்டு தொழிற்ச்சங்க தலைவர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் தொழிலாளிக்கு எதிராக தீர்ப்பு வந்தது இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்  உச்ச நீதி மன்றம் பல்வேறு தீர்ப்புகளை ஆராய்ந்து 26/10/2016 அன்று அரசுத்துறை பொதுத்துறை தனியார் துறை ஆகிய துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலார்கள் அனைவரும் மனிதர்களே அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது ஆகவே ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

 அதன் அடிப்படையில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் அந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 14/11/2018 அன்று ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது கேஷ்வல் மஸ்தூர் ஒப்பந்த ஊழியர்கள் தினக்கூலி ஆகியோருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதோடு நிர்வாகத்தில் காலி இடம் இருந்தால் அவர்களை கொண்டு நிரப்ப வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை பெறுவதற்க்கு TMTCLU  மாநிலச்சங்கம் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இதற்க்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது தேவை எல்லாம் ஒற்றுமைதான் ஒன்றுபடுவோம்..... நிரந்தர ஊழியர்களோடு......  சேர்ந்து போராடுவோம்...
                  நாளை நமதே.......
தோழமையுடன்
 ஆர் செல்வம்
                                                                                                           பொதுச் செயலர்

                                                                                                                 TMTCLU

Friday 2 November 2018

NFTE-TMTCLU
மாவட்டச் செயற்குழு

( 28-10-2018 )

28-10-2018 அன்று மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு நமது NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தோழர் R.பன்னிர்செல்வம் வரவேற்புரையாற்றிட, தோழர் G.ரங்கராஜ்   நமது TMTCLU  சங்கம் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்களுக்காக நேர்மையாகவும், கொள்கை பிடிப்போடும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதில் பெருமிதம் என தமது துவக்கவுரையில் பதிவு செய்தார்.

        மாவட்ட செயலர்   தோழர் A.S.குருபிரசாத் தமது அறிமுகவுரையில்  ஆய்படுபொருளை தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து கூறினார்.  தோழர்கள் P.சுந்திரமூர்த்தி மாநில உதவிச் செயலர்  உரையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் TMTCLU மாவட்டச் சங்கத்தை மனதார பாராட்டுக்கிறேன். மாநிலச் சங்கத்தின் சார்பில் செயற்குழு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தோழர் V.இளங்கோவன் மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் உரையில் உன்னதமான  முறையில் செயல்படும்  மாவட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் கூறினார்.

        NFTE மாவட்ட தலைவர் தோழர் G.கணேசன் கஷ்டப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  அன்றிலிருந்து இன்று வரையில் துடிப்போடும்  சிறப்போடும் செயல்படும் ஒரே  சங்கம் TMTCLU  சங்கம் தான் என தனது உரையில் பதிவு செய்தார்.

மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் உரையில்  தொழிலாளர்களின் நலனில் மிக அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக  ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் உறுதியாகவும், கொள்கைப் பிடிப்போடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவட்டச் செயற்குழு வெற்றி பெற NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தார். தோழர் A.சுப்ரமணியன் மாநில உதவிச் செயலர்  நமது சங்கம் மிகச் சரியான பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றும் நமது சங்கத்தில் இணைந்துள்ள பாரதி உள்ளிட்ட தோழர்களை மாநிலச்  சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்.  தோழர் S.ராமசாமி  நாம் என்றும் NFTE பேரியக்கத்தில் இருப்பதில் தான் மகிழ்ச்சி. ஆகவே  தான் NFTCL சங்கத்திலிருந்து விலகி நான் NFTE-TMTCLU  இணைந்தேன் என்று  தனது உரையில் பதிவு செய்தார்.

தோழர் பாரதி   NFTE-TMTCLU  சங்கங்கள்  தொழிலாளர்களின் நலனில் மிக அக்கறையோடும் சரியான பாதையில்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.   நான் TNTCWU சங்கத்தில் இருக்கும் போதெல்லாம் இச்சங்கத்தில் குறைவான தோழர்கள்தான் இருக்கிறார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இச் செயற்குழுவில் நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான தோழர்கள் வந்திருப்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், அதிகப்படியான தோழர்களைக் கொண்ட மாவட்டச் சங்கம் என இப்போது தான் தெரிந்து கொண்டேன். உண்மையில்  நான் இச்சங்கத்தில் இணைந்ததில் மிக பெருமையடைகிறேன். இச்சங்கத்தில் தொடந்து பயணிப்பேன் என்று தமது உரையில் பதிவு செய்தார்.

தோழர் R.அகஸ்டீன் NFTE மாவட்ட அமைப்புச் செயலர், தோழர் S. மணி NFTE மாவட்ட உதவிச் செயலர் , தோழர் P.ராஜா மாவட்ட துணைத் தலைவர், தோழர் டெல்லிபாபு  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தோழர் S.தமிழ்மணி மாநில இணைப் பொதுச் செயலர்  எதற்காக இச்சங்கம் துவங்கப்பட்டதோ அதனை நோக்கி இச்சங்கம் சிறப்பாக செயல்படுகிறது . ஆகவே மிகச் சரியான பாதையை நோக்கி பயணியுங்கள் , வாழ்த்துக்கள்.

        தோழர் விஜய் ஆரோக்கியராஜ் மாநிலப் பொருளாளர்  என்றும் தனது பாணியில் சங்கம் எவ்வாறு செயப்படுகிறது, நாம் எப்படி இருக்கிறோம், நாம் நமது சங்கத்தின்பால் எவ்வறு இருக்க வேண்டும். நமது துறைக்கும் அரசியால் சார்ந்து எப்படி புரிதல் வேண்டும்,  நமது தேவைகளை நிறைவேற்ற அரசியல் சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும். பிற சங்கங்களை போல் அல்லாமல் நமக்கென தனி அடையாளம் இருக்க ஒவ்வொவ்வரும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும். நமது NFTE-TMTCLU  சங்கங்கள்  கடலூர்,குடந்தை, தஞ்சாவூர் ஆகிய உறுதியால் நாம் போனஸ் முழுமையாக பெற்றுள்ளோம். ஆகவே நமது சங்க தலைமையோடு ஒன்றினைந்து வலு சேர்ப்போம் என தமது உரையில் பதிவு செய்தார்.

அடுத்தப்படியாக தோழர் R.செல்வம்  மாநிலப் பொதுச் செயலர்   நமது NFTE-TMTCLU மாநிலச் சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக தமிழ்நாட்டிலேயே  முதன் முதலில் ரூ 7000/- போனஸ் பெற்றது  நமது கடலூர் மாவட்டம் தான். அதன் தொடர்ச்சியாக தான் மற்ற மாவட்டங்கள் பெற்றுள்ளன. அதன் வழியில் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

இறுதியாக  நமது NFTE மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்  கடலூர் NFTE-TMTCLU  மாவட்டச் சங்கம் கொள்கையில் உறுதியோடு  செயல்படுவதின் காரணமாகத்தான்    நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் பெற்றுத் தந்துள்ளோம். அதன்வழியே நாம் இன்னும் பற்பல கோரிக்கைகளை வென்றெடுக்க  நமது சங்கத்தை இன்னும் பலமுள்ளதாக கட்டிட தொடர்ந்து பயணிப்போம், புதிதாக இணைந்த தோழர்களுக்கு NFTE சங்கத்தின் வாழ்த்துகள். செயற்குழு வெற்றி பெற வாழ்த்துக்கள் என தமது உரையில் பதிவு செய்தார்.

இறுதியாக தோழர் J.கந்தன் மாவட்டப் பொருளாளர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.


மாவட்டச் சங்க நிர்வாகிகளில் 18 தோழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும், சுமார் 30 நிரந்தர ஊழியர்களும் இச்செயற்குழுவில் பங்கேற்றனர்செயற்குழுவில் பங்கேற்று உரையாற்றிய தோழர் விஜய் ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டத் தலைவர்களுக்கு நன்றிசெயற்குழுவிற்கு  வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரிப்புக்கு  நிதி அளித்து  உதவி செய்திட்ட  மூத்த தோழர் V. நீலகண்டன், தோழர் N.ராஜாராமன், தோழர் T.பாலாஜி அவர்களுக்கும்  நமது நன்றி...

மாவட்ட செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

v இந்த ஆண்டு போனஸ் ரூ7000/- பெற்றே தீருவோம் என்று போராட்ட அறைகூவல் விடுத்து போனஸ் பெற்றோம். போராட்டத்திற்கு உறுதுணையாக  நின்ற NFTE மற்றும் BSNLEU  மாவட்டச் சங்கங்களுக்கும், உறுதியாகச் செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி.

v நமது மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சிப்காட், பெண்ணடம் பகுதி  தோழர்களுக்கு மீண்டும் விரைந்து பணி வழங்க வேண்டும்.  மேலும் நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தும் வகையில் தோழர் ராமநாதன் அவர்களுக்கும் பணி வழங்கிட  மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v A/C  பிளாண்ட் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதா மாதம்  சம்பள பட்டுவாடா நடைபெறுவதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்களும் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை;  ஆகவே A/C பிளாண்ட் பகுதி ஒப்பந்த ஊழியர்களை House Keeping Tender ல் சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v TMTCLU மாவட்டச் சங்க நடவடிக்கைகளை விரிவாக்கிட மூன்று புதிய பதவியினை உருவாக்க இச்செயற்குழு அங்கீகரிக்கிறது. தோழர் M.பாரதிதாசன் மாவட்ட இணைச் செயராகவும், தோழர் S.ராமசாமி மாவட்டத் துணைத் தலைவராகவும், தோழர் M.கபிலன் மாவட்ட அமைப்புச் செயலராகவும் இச்செயற்குழு ஒருமனதாகத் தேர்வு செய்கிறது.. புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

v இந்த ஆண்டு குறைந்த பட்ச போனஸ் ரூ 7000/= வழங்கப்பட்டாலும் அது அனைவருக்கும் ஒரே அளவில் வழங்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.  பல ஒப்பந்த ஊழியர்களுக்குப் போனஸ் குறைவாக வழங்கிய ஸ்ரீபாலஜி ஏஜென்ஸி அது கணக்கிடப்பட்ட விவரத்தை உடனடியாக நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும்.. அந்த விவரத்தைப் பெறவும், மேலும் விடுபட்ட தோழர்களுக்கு  போனஸ் வழங்கிடவும்  மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v BSNLEUவின் ஒப்பந்த ஊழியர் சங்கமான  TNTCWU  சங்கத்திலிருந்து விலகிய அதன்  மாவட்டச் செயலர்  தோழர் M.பாரதிதாசன், TMTCLU  சங்கத்தின் செயல்பட்டால் ஈர்க்கப்பட்டு, TMTCLU சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.    தோழர் M.பாரதிதாசன் மற்றும் அவரோடு இணைந்த  அனைத்துத் தோழர்களையும் , மற்றும் தோழர் S. ராமசாமி உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் வாழ்த்தி  TMTCLU மாவட்ட சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

தோழமையுடன்
  A.S.குருபிரசாத்
மாவட்டச் செயலர்