தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Sunday, 31 December 2017


அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாநில தலைவர் உள்ளிட்ட மாநிலச்சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலர்கள் மாவட்டச்சங்க நிர்வாகிகள் கிளைச்செயலர்கள் கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பாக  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் நாம் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்திலும் வெற்றிபெற்று ஒப்பந்த ஊழியர்கள் வாழ்க்கை மேம்பட வாழ்த்துக்கள் மாநில பொதுச்செயலர் ஆர் செல்வம்

தோழமையுடன்
   R.செல்வம்
பொதுச் செயலர்

    TMTCLU.

Wednesday, 13 December 2017

நன்றி ..நன்றி ...


Image result for RED salute images
கூட்டங்களில் மட்டும்  BSNL காப்போம் என முழங்கும் 
வெட்டி பேச்சாளன் அல்லாது ...

பணி  ஓய்வு கூட்டத்திலும்  BSNL  காப்போம் என அறிவுரை 
தரும் நேரம் விழுங்கும் சம்பிரதாய பேச்சாளன் அல்லாது ...

புள்ளி விபரம் தந்தது ...BSNL காப்போம் எனும் 
காகித புலியாக  இல்லாது ...

எங்கள்  வாழ்வும் ...எங்கள்  வளமும்  ... 
மங்காத இயக்கமும் ...BSNL  நிறுவனமேவென   ...

இட்ட குரல் ...எட்டுமுன்னே ...
ஊதியம் உதறி தள்ளி ...

இருநாள் வேலை நிறுத்தத்தில் ...
உணர்வாய் கலந்திட்ட ...

ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும் ...
இருகரம் கூப்பிய நன்றி ..நன்றி ...

தோழமையுடன் 
ஆர் .கே           R .செல்வம்          M .விஜய் 
Wednesday, 6 December 2017

TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
கடலூர்.

 மாவட்ட செயற்குழு  


08-12-2017 அன்று மதியம் மதியம் 2.30 மணியளவில் நமது NFTE  தொழிற்சங்க அலுவகலத்தில் மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு  நடைபெறும். செயற்குழுவிற்கு வருகை தரும் மாவட்ட சங்க , கிளைச் சங்க தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                                                       தோழமையுடன்
                                                                                                            G.ரங்கராஜ்
                                                                                             மாவட்ட செயலர் TMTCLU

   கடலூர்.

Friday, 20 October 2017

NFTE-  BSNL,     TMTCLU,      TAMILNADU CIRCLE.

காண்டிராக்ட் ஊழியர்கள் பிரச்சனை
சமரச  பேச்சுவார்த்தை

20/10/2017 அன்று காலை 11 00 மணியளவில் திரு.அண்ணாதுரைALC அவர்களிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் தோழர்கள் P.காமராஜ் ,மாநிலதலைவர்   R. செல்வம் பொதுச்செயலர், என்.கே.சீனுவாசன் சட்ட ஆலோசகர் மற்றும் நிர்வாக பிரதிநிதி ராஜசேகரன்            (AGM admn ) கலந்துகொண்டனர்.
v போனஸ் சட்டப்படி ரூ7000/= தமிழகத்தில் BSNL காண்டிராக்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை எடுத்து கூறியபின்,,நிர்வாகம் போனஸ் குறித்து காண்டிராக்டர் மட்டுமே பொறுப்பு என கூறியது.  ALC CLIAM மனு தாக்கல் செய்திட ஆலோசனை கூறியுள்ளார். அதன் மூலம் மாநில நிர்வாகத்திற்க்கு உத்திரவு வழங்க முடியும் என கூறினார்..

v பணிதன்மை கேற்ற ஊதியம் வழங்க நிர்வாகம் உத்திரவு வெளியிட்டாலும் அமுலாக்கம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கால கெடு விதிக்க வலியுறுத்தியபின், ஜனவரி 31க்குள் அமுலாக்கம் செய்திட மாநில நிர்வாக்ம் வழிகாட்டுதல் உத்திரவு வெளியிட ஏற்றுக்கொண்டது.

v மற்ற பிரச்சனைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்க ஏற்கப்பட்டது


தமிழ் மாநில NFTE சங்கத்தின்  ஆதரவு பெற்ற ,AITUC  சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட  ஒரே ஒப்பந்த ஊழியர் சங்கம்   TMTCLU .
Wednesday, 18 October 2017

Monday, 16 October 2017

ஒப்பந்த ஊழியர் போனஸ்
2017
தோழர்களே!..
           நமது  NFTE, BSNLEU,  TMTCLU, TNTCWU  நான்கு சங்கங்களின் சார்பாக  16-10-2017 அன்று மாபெரும் தர்ணா போராட்டம்  தோழர் R.செல்வம் மாவட்ட தலைவர் NFTE,                           தோழர் A. அண்ணாமலை மாவட்ட தலைவர் BSNLEU, தோழர் M.S.குமார் மாவட்ட தலைவர் TMTCLU, தோழர் S.V.பாண்டியன் மாவட்ட தலைவர் TNTCWU , ஆகியோரின் கூட்டுத் தலைமையில்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது. இந்தக்  தர்ணா கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும், 50க்கும் மேற்பட்ட நிரந்திர ஊழியர்களும், கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தில் அனைத்து சங்க மாநில, மாவட்ட , கிளை சங்க நிர்வாகிகள்  கண்டன உரையாற்றினார்கள்.   தர்ணா போராட்டத்தினை வாழ்த்தி  தோழர் R.அசோகன் CWC Member ( SNEA ) உரையாற்றினார். இறுதியாக தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் TMTCLU,கடலூர் நன்றியுரை கூற தர்ணா போராட்டம் நிறைவுற்றது.
         நமது  தொடர்  போராட்டத்தின் காரணமாக  நிர்வாகம்   சென்ற ஆண்டு இருந்த EXSERVICEMEN SECURITY-PONDY, NACCS- MADURAI, SRI BALAJI AGENCIES  ஆகியோரிடம்  பேசி  ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்  உறுதிபட தெரிவித்தனர். அதன் விளைவாக   ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது.
Zone – I (NACCS- MADURAI) – Rs 2130  Sri BALAJI AGENCIES) Rs 2173 = Rs 4303/-
EOI - SRI BALAJI AGENCIES  - Rs 3600/-
Cable and other Zone Sri BALAJI AGENCIES– Rs 2256 +  (EXSERVICEMEN SECURITY-PONDY) Yet to be Credited .
        SRI BALAJI AGENCIES  01-06-2017   முதல் ஒப்பந்த எடுத்ததன் காரணமாக இந்த  நான்கு மாத்திற்கான போனஸ்  தருவதாகவும், மீதி  தொகையினை மார்ச்-2018ல் தருவதாகவும்  நிர்வாகத்திடம் உறுதிபட தெரிவித்துள்ளார். அதனை நமது மாவட்ட செயலர்களிடம்  முதுநிலை பொதுமேலாளர் அவர்கள் தெரிவித்ததுமட்டுமில்லாமல் தர்ணா போராட்டத்தினை   முடித்து கொள்ளுமாறும், போனஸ் பிரச்சனை  இனிமேல் வராமல்  இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் கூறினார். அதன்படி  நமது இந்த தர்ணா போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
        குறிப்பு:- சென்ற ஆண்டு  ரூபாய் 2000/- கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது
        இந்த தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,,,,ஆதரவளித்த  SNEA, AIBSNLEA மாவட்ட சங்கங்களுக்கும் நன்றி...
     தோழமையுடன்
NFTE – BSNLEU – TMTCLU - TNTCWU

மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.
Monday, 9 October 2017


ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயமான போனஸ்  கிடைத்திட  நமது NFTE-TMTCLU சங்கங்களின் சார்பில் 11-10-2017 அன்று அந்தந்த மாவட்டத்திலுள்ள உதவி தொழிலாளர் நல ஆனையர் ( ALC )அவர்களை சந்தித்து நமது மாவட்ட சங்கங்கள் மனு கொடுக்குமாறு  தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
மற்றும் 16-10-2017 அன்று மாவட்ட தலை நகரில் உண்ணாவிரத  போராட்டம் நடத்திட  மாநிலச் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                    தோழமையுடன்
                                                                                         R.செல்வம்
                                                                        மாநிலச் செயலர்-TMTCLU.

To
The Assitant Labour Commissioner
           ------------


Respected Sir,
                   Sub:  Statutory Bonus to BSNL Contract Workers, Submission of Memorandum   - 
                            - Intimation – reg
                   Ref:  Payment of Bonus Act 1965
***     ****    ***
          We would like to submit the following few lines for your kind notice with the request to take suitable action thereon please.

          We represent the Contract Workers engaged by Contractors for performing the assigned duties for the Public Sector concern, the BSNL.   We welcome whole heartedly the recent upward revision made in the Payment of Bonus Act. 1965 fixing Rs.7000/= as eligible statutory Minimum Bonus for workmen.

          In this regard we requested the contractors to abide by the Bonus Act and make necessary arrangement for disbursing the eligible minimum Bonus of Rs. 7000/= to every contract worker well before the Deepavali Festival.  We also requested the authorities of BSNL, the Principal Employer, to ensure the Payment of Bonus.

          We apprehend that the statutory obligation entrusted with the employers, both the Employer i.e., the Contractor and the Principal Employer i.e.,  here the Public Sector concern, the BSNL, would not be honored unless you intervene and use your good offices. 

          We have reasons for our apprehension as the contractors trying to hoodwink by putting forward the argument that they do not hold the contract-ship for the whole year and they are new and so on. And as for as the Principal Employer concerned they quite satisfied  to rest with a mere instruction issued to the contractors without taking the responsibility to ensure payment of the statutory Bonus.  Hence our request for your intervention Sir.

          We would like to meet you on  11  -10 - 2017 as a delegation to present our charter of Demands please.  This is for your kind information please.

          Anticipating meeting you, Sir,

                   With kind regards,


                                                                                     Yours faithfully,   
                                                                  
                                                                                   ( District Secretary )
   

AGM (A)/CL/ Guidelines  /16-17 சென்னை தேதி 04—10—2017 கடிதத்தின் தமிழாக்கம்
பெறுநர்
அனைத்து மாவட்ட தலைமை அதிகாரிகள்
தமிழ்நாடு வட்டம்.

                        பொருள் : ஒப்பந்த ஊழியர்கள்டெல்லி தமைமையக
                                             உத்தரவுகள் அமலாக்கம்தொடர்பாக

                   பார்வை : கார்பரேட் அலுவலக கடித எண் BSNL / அட்மின் 1/
                                  29 – 5 / 2007 ( Pt ) தேதி 06—02—14
•••     •••    •••
          ஒப்பந்த ஊழியர்கள் குறித்துக் கீழ்க்கண்ட தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக, காலத்தில் செயல்படுத்துவது தொடர்பாக மேலே பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள கார்பரேட் அலுவலக உத்தரவுகளைக் காண்க. 

i)          தொழிலாளர்கள் பிராவிடண்ட் பண்டு மற்றும் பிற சட்டம் 1952
ii)        தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் 1948
iii)       ஒப்பந்தத் தொழிலாளர் (வரைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்பந்த முறைமை ஒழித்தல் ) சட்டம் 1970
iv)        தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கல் சட்டம் 1936, மற்றும்
குறைந்த பட்ச ஊதிய சட்டம் 1948, பிற
BSNL நிறுவனத்திற்காக பணி செய்யம் ஒப்பந்ததாரர்கள் மற்றும் முகவர்கள் மேற்கண்ட சட்டங்களின் ஷரத்துகளை மிகக் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
சட்டபூர்வமாக நிறைவேற்ற வேண்டிய அந்தக் கடப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும் அமலாக்கவும் பலமுறை பல வழிகாட்டு நெறிமுறைக் கடிதங்கள் இந்த அலுவலகத்திலிருந்தும் அனுப்பப்பட்டன.
தமிழகத்தில் பல மாவட்டங்கள் இவற்றை அமல்படுத்தினாலும் சில மாவட்டங்கள் இன்னும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. கீழ்க்கண்டவைகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரியவருகிறது,
i)       காலத்தில் தாமதமின்றி ஊதியம் வழங்கல்
ii)     இபிஎஃப் பிடித்தம்
iii)      பிடிக்கப்பட்ட இஎஸ்ஐ தொகையை அதற்குரிய அலுவலகத்தில்  செலுத்துவது
மேலும் கீழ்க்கண்ட குறைபாடுகள் இந்த அலுவலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
i)     ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை, விவரமான சம்பளப்பட்டியல் ஒப்பந்ததாரரால் வழங்கப்படவில்லை
ii)     ஒப்பந்ததாரர் மாறினாலும் இபிஎஃப் சலுகை தொடர்வதற்காக ஒப்பந்த ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பெற்றுத்தரப்பட வேண்டிய நிரந்தர (இபிஎஃப்) கணக்கு எண்        UAN NO வழங்கப்படவில்லை.
எனவே ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதிக்குள் ஊதியத்தை வழங்கவும், உரிய இபிஎஃப் / இஎஸ்ஐ பிடித்தங்களை மேற்கொள்ளவும் பொருத்தமான உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்ற மாத சம்பளபில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் வைப்பதால் ஒப்பந்ததாரர்களால் அடுத்த பில்லை தயாரித்து சமர்பிக்க முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது. அத்தகைய சந்தர்பங்களில் இபிஎஃப் / இஎஸ்ஐ பிடித்தங்களை நிறுத்தி வைத்து ஒப்பந்ததாரர்களின் அடுத்த பில்கள் பரிசீலிக்கப்படலாம்இதனால் ஒப்பந்ததாரர்கள் பில்கள் சமர்பிப்பதும் பரிசீலிக்கப்படுவதில் ஏற்படக்கூடிய தாமதத்தைத் தவிர்க்கலாம்.
II . நிலுவை ஊதியம் வழங்கல்
குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட மேதகு சென்னை நீதிமன்ற உத்தரவை அமலாக்க 20-05-2009 தேதி முதல் உரிய உயர்த்தப்பட்ட ஊதிய நிலுவை வழங்க ஏற்கனவே வழிகாட்டுதல் தரப்பட்டது .(இவ்வலுவலகக் கடித எண் SR / 50 – 1/ BSNLEU /200 – 15 தேதி 27-07-16 காண்க ) ஈரோடு, பாண்டி, கோவை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் ஊதிய நிலுவை வழங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது..  ஏனைய மாவட்டங்களிலிருந்து ஊதிய நிலுவை வழங்குவது தொடர்பாக எந்த அறிக்கையோ தகவலோ வரவில்லைநீதி மன்ற அவமதிப்பு வழக்கைத் தவிர்க்க விரைந்து அந்த மாவட்டங்கள் நடவடிக்கை எடுக்கவும்.
மேலும், ஜனவரி 2017 முதல் தற்போது மீண்டும் திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தால் வழங்க வேண்டிய உரிய ஊதிய நிலுவைகளையும் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கவும்.
III போனஸ் தொகை வழங்குவது
ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர் அவரால் பணிக்கு அமர்த்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் போனஸ் சட்டம் 1965 படி போனஸ் வழங்க வேண்டும்ஒப்பந்த ஊழியர்களை காண்டிராக்டர்கள் நியமனம் செய்வதால் ஒப்பந்ததாரரே போனஸ் வழங்கவும் சட்டப்படி கடமைப்பட்டவராகிறார்.
என்றாலும், இந்தச் சட்டபூர்வமான போனஸ் வழங்கும் கடமையை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்களை (அதிகாரிகள்) வலியுறுத்த வேண்டும்.
IV ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்கக் கோரியிருந்தோம்தஞ்சை, கடலூர்,  விருதுநகர், தூத்துக்குடி, சேலம், காரைக்குடி , குன்னூர் , வேலூர், தர்மபுரி, எலெக்ட்டிரிகல் மற்றும் சிவில் மாவட்டங்களிலிருந்து நோடல் அதிகாரி நியமிக்கப்பட்ட விவரம் வரவில்லைஅத்தகைய மாவட்டங்கள் நோடல் அதிகாரிகளை நியமித்து விபரங்களை உடனே மாநில அலுவலகத்திற்கு அனுப்பவும்ஒப்பந்ததாரர்கள் பில்கள் சமர்பித்தல் மற்றும் பரிசீலனை குறித்து கண்காணிக்கும் பொறுப்பு நோடல் அதிகாரிகளைச் சார்ந்தது.
                                                                                             (      ஒம்)
                                                                                            Dy GM (Admn)
                                                                             CGM Office BSNL. Chennai.