தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday, 24 April 2017

மார்க்சியம் என்றால் என்ன?...

       கடவுளாக இருந்தாலும் கம்ப்யூட்ராக இருந்தாலும் மனிதன் பராமரித்தால் தான் பரவசமாக இருக்கும் . இல்லையென்றால் பாழடைந்திருக்கும். எனவே மார்க்சியம் கடவுளுக்கோ, கம்ப்யூட்ரோக்கோ  எதிரானது என்பது இல்லை. படைக்கப்பட்ட  எல்லா பொருட்களும் மனிதனால் உருவாக்கப்பட்டது. எனவே பராமரிக்க மனிதன் தேவையென்று மார்க்சியம் கூறுகிறது. முதாலாளி, தொழிலாளி அதிலும் ஏற்றத்தாழ்வு. முதாலாளி என்பவர்  தொழிலாளியின் உழைப்பால், உற்பத்தியால்   உயரக்கூடியவர். ஆகவே தொழிலாளியின் உற்பத்தியின்  லாபத்தில் பங்கு வேண்டும். அவன் இளமைக்காலம் முழுமையும் உழைப்பதால் முதுமை காலத்தில் அவன் வாழ ஓய்வு ஊதியம் வேண்டும். உழைக்கும் போதே வாழ்வதற்கு தேவையான ஊதியம் வேண்டும். முதுமை காலத்தில் வாழ்வதற்கு தேவையான ஓய்வு ஊதியம் வேண்டும். இதனை பெறுவதற்கு இளமைக்கும் முதுமைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில் அவன் போராடி காலங்கள் கழிக்க நேரிடுகிறது. இதனை மாற்ற வேண்டும் என்பது தான் மார்க்சியம். மார்க்சியம் முதலாளிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. தொழிலாளி  மதிக்கதக்க வகையில் வாழ வேண்டும் என்பதே மார்க்சியம். ஆகவே உச்ச நீதிமன்றம்              26-10-2017   அன்றைய தீர்ப்பின் அடிப்படையில்  ஒப்பந்த  தொழிலாளி யாவரும் மதிக்கதக்க மனிதனே அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சம வேலைக்கு சம ஊதியம் உள்பட அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும் என்று மார்க்சியத்தை உருவாக்கிய மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் 200வது பிறந்த ஆண்டில் நியாயம் கிடைக்க சபதமேற்ப்போம்.

தோழமையுடன்
    R.செல்வம்

                                                                                     பொதுச் செயலர், TMTCLU

Saturday, 22 April 2017

முக்கிய செய்தி

அன்புள்ள தோழர்களே! வணக்கம், நமது  TMTCLU  சங்கத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வாராந்திர ஒய்வுக்கு ஊதியம் வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமனறத்தின்  தீர்ப்பின் அடிப்படையிலும். சில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும்    மத்திய  தொழிலாளர்   நல தீர்ப்பாயத்தின் வழிகாட்டலின் அடிப்படையிலும் நமது  இலாக்காவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 21-04-2017 அன்று  உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
தோழமையுடன்
     R.செல்வம்
     மாநில பொதுச் செயலர்
      TMTCLU


Tuesday, 18 April 2017

மாவட்ட தலைநகரில் மாபெரும் தர்ணா (15-04-2017)

          நமது பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற  மாலை நேர தர்ணா TMTCLU  மாவட்ட தலைவர் M.S.குமார் தலைமையில் துவங்கியது. நமது  மாவட்ட முழுமையும் உள்ள முன்னனி தோழர்கள் உள்ளிட்ட சுமார் 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தில்  வரவேற்புரையாக தோழர் G.ரங்கராஜ் மாவட்டச் செயலர் TMTCLU துவக்கவுரையாற்றினார்.  தோழர் S.ராஜேந்திரன் கிளைச் செயலர் NFTE/CDL, தோழர் K.சீனுவாசன் கிளைத் தலைவர் NFTE/CDL, தோழர் A.S.குருபிரசாத் கிளைப் பொருளாளர் NFTE/CDL, தோழர் P.சுந்தர்ராஜ் கிளைத் தலைவர் TMTCLU/CDL, தோழர் A.பாஸ்கர் கிளைச் செயலர் TMTCLU/ULD, தோழர் E.C.கண்ணன் கிளைச் செயலர் TMTCLU/KAC உள்ளிட்ட தோழர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துத்தனர்.
        NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.K கண்டன உரையாற்றினார். அவரை தொடர்ந்து தோழர் A.சுப்ரமனியன் மாநில உதவிச் செயலர் TMTCLU/VLU , தோழர் V.இளங்கோவன் NFTE மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர், மூத்த  தோழர் சு.தமிழ்மணி மாநில இனைப் பொதுச் செயலர் TMTCLU   ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.
        இறுதியாக NFTE மாநிலச் செயலர்  தோழர் K. நடராஜன் அவர்கள்  மாநில நிர்வாகம்  வெளியிட்ட (குறித்த நேரத்தில் சம்பளம், ESI, EPF, WAGE SLIP) உத்திரவினை கறாராக அமுல்படுத்திட வேண்டும், பணித்தன்மைக்கேற்ப ஊதியம் போன்றவற்றினை மாநில நிர்வாகம் உடனடியாக அமுல்படுத்திட வேண்டும்  என்றும்.  தேவை ஏற்படின்  மாநில தலைமை பொது மேலாளர் அலுவலக  முன்பாக  ஒரு நாள்  போராட்டம்  நடத்திட    தயாராகுவோம்... மற்றும் இப்போது நம் ஒப்பந்த ஊழியர்கள் வாங்கும்  புதிய சம்பளம் என்பது ஒரு இடைக்கால நிவாரணம் தான்.... நமது NFTE-TMTCLU சங்கத்தின் இலக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்பது தான், அதனை நோக்கி நாம் தொடர்ந்து பயணிப்போம் என்றும் . இனி வருங்காலங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றி ஒரு பணியும்  நகராது என்று குறிப்பிட்டார். அதே போல் சம்பள ரசீதை ஒப்பந்தக்காரர்  ஓப்பந்த ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுப்பதற்கு நாம் உறுதி செய்ய வேண்டும்.  ஏனெனில் சில இடங்களில் வாங்கும் ஊதியத்தில் ஒருபகுதியை மட்டும் அடிப்படை ஊதியமாகக் காட்டி அதற்கேற்ப EPF தொகையை குறைத்துக் கணக்கிட்டு EPF அலுவலகத்தில் கட்டும் தவறு நடக்கிறது.   நம்முடைய தர்ணா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மாநில நிர்வாகம் நமது சங்கத்தை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் உடனடியாக இதன் மீது உரிய கவனம் செலுத்தி பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாகக் கூறினார்கள்.. அதுமட்டுமில்லாமல் இன்றைய போட்டி சூழலில் இதுபோல் தர்ணா போராட்டம் நடத்துவதைத் தவிற்குமாறு கேட்டுக் கொண்டது. இருந்த போதும்  நமது  எதிர்ப்பை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இந்த தர்ணா போராட்டம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார். இறுதியாக தொழிலாளர்களை ஏமாற்ற வலைத்தளங்களில் மட்டும் தொழிற்சங்கங்களை நடத்துபவர்களை கண்டு ஏமாறாமல் உண்மையாக தொழிலாளர்களுக்கு  பாடுபடும் நமது NFTE-TMTCLU தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கையோடு இருங்கள்.. நிச்சயம்  உங்களின்  எதிர்காலத்தை வளமாக்கும். ஏனெனில் இந்த சங்கம் ஜெகன் மற்றும் தமிழ்மணி போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட சங்கம்.. ஆகவே நம்பிக்கையோடு இருங்கள் மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.. வெற்றி பெறுவோம் .
        இறுதியாக நமது தோழர் S.வெங்கட் அவர்கள் நன்றி கூற இனிதே தர்ணா போராட்டம் முடிவுற்றது.  தர்ணா போராட்டத்திற்கு வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும்  தேனீர் வழங்கிய நமது மூத்த தோழர் K.செல்வராஜ் அவர்களுக்கும், இரவு உணவு வழங்கிய  கடலூர் தோழர் P.குமார் அவர்களுக்கும் மற்றும்  தான் வாங்கிய போனஸ் தொலையினை NFTE மாநில மாவட்ட, கிளைச் சங்கத்திற்கும், TMTCLU மாவட்ட சங்கத்திற்கு தலா ரூ500/- வழங்கிய மூத்த தோழர் V. நீலகண்டன் SS அவர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக  நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.   
      தோழமையுடன்

      NFTE-TMTCLU
மாவட்டச் சங்கங்கள்,
          கடலூர்.


             
           


Sunday, 16 April 2017

Dr.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும்
TMTCLU கிளைமாநாடு-சிதம்பரம்.

             14-04-2017 அன்று மாலை 05;00 சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் தோழர்கள் K.நாவு. கிளைதலைவர்-NFTE,V.கிருஷ்ணகுமார் TMTCLU ஆகியோர் தலைமையில் கூட்டம் இனிதே துவங்கியது. தோழர் D.ரவிச்சந்திரன் மாவட்ட உ.செயலர் வரவேற்புரை நிகழ்த்த,தோழர் R.செல்வம் பொதுசெயலர் TMTCLU துவக்கவுரையாற்ற தோழர் V.லோகநாதன் மாநில துணைத்தலைவர் தனது சிறப்புரையில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார். அடுத்ததாக நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பட்டியலை தோழர் M.S.குமார் மாவட்ட தலைவர் TMTCLU அவர்கள் வெளியிட தோழர்கள் E.டில்லிபாபு. CL, D.ரவிச்சந்திரன்.TT, K.சுந்தர் CL தலைவர், செயலர், பொருளர் என முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை மாநாட்டினை வாழ்த்தி தோழர்கள் A.சுப்பிரமணியன் மாநில உதவிசெயலர் TMTCLU, D.குழந்தைநாதன்.மாவட்ட உதவிச் செயலர் NFTE, V.இளங்கோவன்.மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் NFTE, M.S.குமார் மாவட்டதலைவர் TMTCLU, R.பன்னீர்செல்வம்.கிளைசெயலர் -TMTCLU /கடலூர், A.C.முகுந்தன் மாவட்ட அமைப்புச் செயலர் NFTE, A.S.குருபிரசாத்.கிளைபொருளர்/கடலூர். NFTE, V.பாலகிருஷ்ணன். கிளைசெயலர்-NFTE. /KTL ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
நிறைவுரையாற்றிய குடந்தை NFTE மாவட்ட செயலரும், TMTCLU மாநில பொருளாளருமன  தோழர் M.விஜய் ஆரோக்கியராஜ் அவர்கள் தனது உரையில் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள உயர்வு பெற எப்படியெல்லாம் போராட்டங்கள் நடத்தி பெற்றுள்ளோம் என்பதையும், குடந்தை மாவட்டத்தில் புதிய ஊழியர்களை சேர்ப்பதை தடுத்துள்ளதையும்,ஒப்பந்த ஊழியர்களின் தீர்வடையாத பிரச்சனைகளை பொதுமேலாளருடன் பேசி தீர்த்துள்ளதையும் விளக்கமாகவும், அம்பேத்கரின் அரசியல் சார்ந்த வாழ்க்கை முறையினை விளக்கமாகவும் கூறி புதிய நிர்வாகிகளை வாழ்த்துக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். கூட்டத்தில் 70க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டனர் இறுதியாக தோழர் S.ரவிச்சந்திரன் JE/STP அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.


தேர்ந்தெடுக்கப்பட் புதிய கிளை நிர்வாகிளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்...
தலைவர்                        : E.டில்லிபாபு
து.தலைவர்கள்              : V.கிருஷ்ணகுமார்
                                       : A.பாலமூர்த்தி
                                       : K.வாசுதேவன்
செயலர்                          : D.ரவிச்சந்திரன் TT
உதவிச் செயலர்கள்      : B.சேகர்
                                       :    சக்திராஜா
                                       : B.கலியபெருமாள்
பொருளாளர்                 : K.சுந்தர்
அமைப்புச் செயலர்கள் : A. நீலமேகம்
                                       : K.மலையரசன்
                                       : S.பாஸ்கர்
                                       : K.கென்னடி
                                       : R.கார்த்திக்கேயன்