தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday, 2 August 2018

தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் 
மாநிலச் சங்கம்

தோழர்களே!....
அன்புள்ள தோழர்களே வணக்கம் இன்று (31/07/2018) NFTE மாநில செயலர் தோழர் K.நடராஜன், TMTCLU மாநில செயலர் R.செல்வம்  BSNLEU மற்றும் Tntcwuமாநில தலைவர்  முருகையா சீனுவாசன் ஆகியோர் (DCLC) துணை தலைமை தொழிலாளர் நலஆணையர் அவர்களை சந்தித்து வரும் ஆண்டிற்க்கான போனஸ் பற்றியும் கேரள மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் 13 நாட்கள் விடுமுறை தமிழ் நாட்டில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்து  பேசினோம்
 அவர்கள் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து போனஸ் வழங்க ஏற்ப்பாடு செய்வதாகவும் லீவு சம்மந்தமாக பிறகு பேசலாம் என்று கூறினார் மாவட்ட செயலர்கள் மாநிலசங்க நிர்வாகிகள் தலமட்டங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து பேச்சுவார்த்தை துவங்குமாறு மாநிலச்சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
                                               
தோழமையுடன்
     R. செல்வம்.
பொதுச் செயலர்

                                                                       TMTCLU

தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் 

மாநிலச் சங்கம்.

தோழர்களே!...
        மரியாதைக்குறிய NFTE மாவட்டச் செயலர்களுக்கு ஓர் வேண்டுகோள் தமிழ்நாடு முழுவதும் A/C Plant ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் ரூபாய் 4000 முதல் ரூபாய் 7000 வரை தான். ஆனால் மாநில நிர்வாகம் AMC ஒப்பந்த முறையில் ஒப்பந்தகாரருக்கு ஒரு நபருக்கு ரூபாய்12000வீதம் மூன்று நபர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.ஆனால் ஒப்பந்தகாரர் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவ்வாறு கொடுப்பதில்லை.. ஊதியமும் குறைவான  அளவில் கொடுட்ப்பதும் மேலும் EPF ,ESI  போனஸ் போன்ற எந்த சலுகையும் நடைமுறைப்படுத்துவது கிடையாது.
               ஆகவே நமது TMTCLU சங்கத்தின் சார்பாக துணை தலைமை தொழிலாளர் நல ஆணையருக்கு கடிதம் கொடுத்துள்ளோம்.மேலும் நமது  மாநில நிர்வாகம் AMC முறையை மாற்ற முடிவு செய்துள்ளதாக அறிகிறோம் ஆகவே மாவட்டச்செயலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்தி AC Plant ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நமது SSA  டென்டரில்  கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுகிறேன்.
       அப்படி செய்வதால் நிர்வாகத்திற்கு பணமும் மிச்சமாகும் நமது தோழர்களும் பயனடைவார்கள்...ஆகவே இதில் உரிய கவனம் செலுத்திட உங்களை தோழமையோடு கேட்டுக் கொள்கின்றேன்... நன்றி....
                                                                                           தோழமையுடன்
                                                                                                R.செல்வம்

                                                                                    பொதுச் செயலர்,TMTCLU..