தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday, 19 January 2015

Contract Labour wages : Circle Secretary spoke to CGM seeking regulation of Wage bills of Contract Labours, viz., submission of bills by Contractor to SSAs, sending of processed bills by SSAs to Circle Office, payment by Circle Office, etc. Funds yet to be released by Corporate Office.   

Saturday, 3 January 2015

BSNL அதிகாரிகள் – ஊழியர்கள் கூட்டமைப்பு  

கடலூர் 

பரிதவித்து நிக்குது ஒரு குடும்பம்!
உதவுவது நம் கடமை!!
கை ஏந்திக் கேட்கின்றோம், நன்கொடை தாரீர்...

அன்புள்ள தோழர்களே!.. தோழியர்களே!...
தோழர்  R.பாலசுப்ரமணியன் என்ற ஒப்பந்த ஊழியர்  சிதம்பரத்தில் புத்தாண்டு தினத்தில்  - பழுது நீக்க சென்ற இடத்தில் – நடந்த விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

     BSNL-லுக்காக பணியாற்றிய  அந்தத் தொழிலாளி  இன்று இல்லை!.. அவரது சொற்ப ஊதியத்தை நம்பி இருந்த ஒரு குடும்பமோ இன்று நிற்கதியாய் உள்ளது...நம் எல்லோர் கண்களிலும் செய்தி அறிந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது....

ஒப்பந்த ஊழியர் என்பதனால் இழப்பீடு ஏதும்
பெரிய அளவில் கிடைக்க வாய்ப்பில்லை...

ஆனால் அவரது தோழர்களான நம்மால் அவர் குடும்பத்திற்கு நிச்சயம் உதவ முடியும். இதுபோல முன்பும் உதவி இருக்கின்றீர்கள்
அந்த நம்பிக்கையில் வேண்டுகின்றோம்...

உதவுங்கள் , பெரிய மனதோடு
                  ஓரிரு கண்ணீர்த் துளிகளையாவது
                                                துடைக்க முயல்வோம்!..

வழுக்கும் நிலத்தில் ஊன்றுகோலாய்...வாழ்க்கை இழந்தவர்களுக்கு  
உங்கள் உதவி புதிய நம்பிக்கையைத் தரட்டும்.

     கண்ணீரோடு வேண்டுகின்றோம்!..
                              தாராளமாக நிதி அளிப்பீர்!...
   
நிதி தந்திட வங்கி கணக்கு எண் : 

S.KUMAR - INDIAN BANK - 

MELAPATTAMPAKKAM BRANCH -

 A/C NO. 520869263

தோழமையுள்ள
K.T.சம்பந்தம் D/S, BSNLEU          இரா.ஸ்ரீதர் D/S ,NFTE ,                            R.ஜெயபாலன் D/S ,FNTO
C.பாண்டுரங்கன் D/S SNEA ,   P.வெங்கடேசன்  D/S ,AIBSNLEA
G.ரங்கராஜ் D/S ,TMTCLU,          M.பாரதி D/S ,TNTCWU,
                                                                                         கடலூர்        

Thursday, 1 January 2015

வருந்துகிறோம்


சிதம்பரம் - சக்தி நகர் தொலைபேசிநிலையத்தில் 
பணிபுரிந்த ஒப்பந்தஊழியர் 
தோழர்.பாலு (எ) பாலசுப்ரமணியம் 

இன்று 1.1.2015 மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்  
என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
தோழரது  பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் .