தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 27 January 2016

நிறுவன முதலாளிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது: இ.பி.எப்.ஒ. ஆணையர் தகவல்

அனைத்து நிறுவனங்களின் முத லாளிகளுக்கும் டிஜிட்டல் கையொப்பம் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தாம்பரத்தில் உள்ள மத்திய தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி அலுவலக ஆணை யர் (பொறுப்பு) எஸ்.முருகவேல் கூறியதாவது:
மத்திய அரசின் இ.பி.எப். திட்டம் பிரிவு 78-ன் படி அனைத்து நிறுவனங்களின் முதலாளிகளுக் கும் டிஜிட்டல் கையொப்பம் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சந்தாதாரருக்கும் 15 இலக்க எண்ணை அளிக்கும் யுனிவர்சல் கணக்கு எண் (யு.ஏ.என்.) அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், முந்தைய நிறு வனங்களில் இருந்து பி.எப். கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் சந்தாதாரர்கள் தங்களின் பான் கார்டு எண், வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்வதன் மூலம் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இம்மாதம் 1-ம் தேதி முதல் இந்த யு.ஏ.என். கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தொழிலாளர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதி விவரங்களை செல்போன் மூலம் அறிந்துகொள்வதற்கான புதிய வசதியும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிய நிறுவனங்களுக்கு குறி யீட்டு எண் பெறும் வசதி முன்பு 30 நாட்களாக இருந்தது. இது ஆன்லைனில் செய்யப்படுவதால் தற்போது உடனடியாக குறியீட்டு எண் வழங்கப்பட்டு வருகிறது. முன்பு ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் வாழ்நாள் சான்றிதழை வங்கியின் மூலமாகவே பெறும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது பிரதமரின் ஜீவன் பிர மான் திட்டத்தின்படி, தற்போது ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம், வங்கிகளில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு முருகவேல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment