தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 13 January 2016

தோழர் பரதனின் ...சொத்து குவிப்பு விபரம்

43Bardhan.jpg.image.975.568.jpg
80 வருடங்களுக்கு மேலாக கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்த,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் தோழர் பரதனின் மறைவுக்கு பின்னர், அவருடைய சொத்துக்கள் என்று கருதப்பட்டவைகளின் பட்டியலும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது
*துருபிடித்த அலமாரி
*ஒரு ஜோடி ஷூ
*சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று
*அவருடைய அடையாளமான கோட் ஒன்று
*பழுதடைந்த இரவு விளக்கு ஒன்று
*ஒரு பிளாஸ்க்
இந்த பொருட்களுடன்தான் அவர் கடந்த ஐந்தாண்டுகளாக வாழ்க்கை கடத்தி இருக்கிறாரா ? என்று நெகிழ்ச்சி குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.ஆதிவாசிகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், உழைக்கும் வர்கத்தினருக்காகவும் எழுதியும் குரல் கொடுத்தும் தன்னுடைய வாழ்க்கையை கழித்த தோழருக்கு செவ்வணக்கம் என்று,  கட்சி பேதம் பாராமல் அனைவரும் .  காம்ரேட் பரதனுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
Com.-Bardhan_2

2 comments: