தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) கீழ், நிறுவனங்கள் இணைவதற்கு குறைந்தபட்ச ஊழியர்களின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க மத்திய தொழிலாளர் நல 
அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஒதுக்கீடுகள் சட்டப்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர் எண்ணிக்கை கொண்ட நிறுவனங்கள், இபிஎஃப்ஓ சமூக நலத் திட்டங்களில் இணைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவதை உறுதி செய்ய, இந்த எண்ணிக்கையை 10 ஆக குறைக்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இம்முடிவால் கூடுதலாக 50 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

வரும் ஏப்ரல்- மே மாதத்தில் அமலுக்கு வரவுள்ள இம்மாற்றம் குறித்து ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு வெளியாகும். இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை.