தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Saturday 14 March 2015

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

கிராமிய அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.
அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள்போல் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும், கிராமப்புற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நேரம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதன்படி, கும்பகோணம் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், குத்தாலம், குடவாசல் ஆகிய தாலுகாவில் உள்ள 155 கிராமப்புற அஞ்சலகங்களும் இயங்கவில்லை. இதில் பணியாற்றும் 356 ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4-வது நாளாக வெள்ளிக்கிழமை கும்பகோணம் தலைமை அஞ்சலக வாயில் முன் கையில் மண்சட்டி ஏந்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால், கிராமங்களில் அஞ்சல் பட்டுவாடா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் உதவி தொகை பட்டுவாடாவும் வழங்கப்படவில்லை. இதனால் முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரத்தநாட்டில்... அஞ்சல் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தின் பட்டுக்கோட்டை கோட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் துரைராசு, பொருளாளர் சோமு, முருகையன், பஞ்சவர்ணம், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment