தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com
Tuesday, 31 March 2015
Friday, 27 March 2015
மாநிலம் முழுதும் தீயென பரவட்டும்
ஒப்பந்த ஊழியர் போராட்டம்
நேற்று 27/03/2015 காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
பிப்ரவரி மாத சம்பளத்தை வழங்கக்கோரியும்
வரும் மாதங்களில் குறித்த தேதியில் சம்பளத்தை பட்டுவாடா செய்யக்கோரியும் காலையில் போராட்டம் துவங்கியது.
பகல் 12 மணிக்குள் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டு அவ்வாறே பட்டுவாடா செய்யப்பட்டது.
நமது தோழர்கள் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதால் ஒரு சில வங்கிகளில் சம்பளம் இன்னும் வரவு வைக்கப்படவில்லை.
இன்று அனைத்து தோழர்களுக்கும் பட்டுவாடா செய்து முடிக்கப்படும்.
மார்ச் மாதச்சம்பளம் 07/04/2015க்குள் வழங்கப்படாவிட்டால்
08/04/2015 அன்று போராட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் பிரதி 7ந்தேதி சம்பளம் வழங்கவில்லை என்றால்
ஒவ்வொரு மாதமும் பிரதி 8ந்தேதி போராட்டம் நடைபெறும்.
ஒப்பந்த ஊழியர்களுக்காக
ஒவ்வொரு மாதமும்
நிச்சயிக்கப்பட்ட போராட்டம்
நிச்சயம் நடைபெறும்
Thursday, 26 March 2015
Wednesday, 25 March 2015
காரைக்குடியில் போராட்டம்
அறப்போர்
தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
உரிய தேதியில் சம்பளம் இல்லை...
சட்டரீதியான சலுகைகள் இல்லை..
காரணம்...
தொழிலாளரை சுரண்டிப் பிழைப்பதற்காகவே
அவதாரம் எடுத்துள்ள குத்தகைக்கரர்களும்..
அவர்கள் போடும் சிறு.. சிறு...
எலும்புத்துண்டுகளுக்காக
ஏங்கி நிற்பவர்களுமே...
தற்போது காரைக்குடியில்
MALLI SECURITY என்ற குத்தகைக்காரனுக்கு
இலாக்கா விதிமுறைகளை மீறி
தற்காலிக ஏற்பாடு என்னும் பெயரில்
குத்தகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த MALLI SECURITY கடந்த இரண்டு வருடங்களாக
இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதியில்
காவல் பணிக்கு குத்தகை எடுத்து...
காவல் பணி செய்யும் ஊழியர்களிடம்
மாதம் 1000 ரூபாய் கூலியைக் குறைவாக கொடுத்து
கொள்ளையடித்துக் கொண்டிருப்பவன்...
இதனை நாம் சுட்டிக்காட்டியும்
வழக்கம் போல் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை...
அத்தகைய குத்தகைக்காரனுக்கு
HOUSE KEEPING குத்தகையை விதிமீறி
கொடுத்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில்... சென்ற பிப்ரவரி மாத சம்பளம்
இம்மாதம் 26/03/2015க்குள்
MALLI SECURITY மூலம் வழங்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.
நமது கோரிக்கை...
- ஏற்கனவே காவல் பணிகளில் கடந்த இரண்டு வருடங்களாக குறைத்துக்கொடுக்கப்பட்ட கூலியை திருப்பித்தரவேண்டும்...
- தற்போதைய குத்தகையில் உரிய கூலி கொடுக்க வேண்டும்...
- EPF,ESI,BONUS உள்ளிட்ட சலுகைகளை தவறாது கொடுக்க வேண்டும்..
- நிர்வாகம் ஒத்துக்கொண்டபடி பிப்ரவரி மாத சம்பளத்தை 26/03/2015க்குள் வழங்க வேண்டும்..
- வருகின்ற மாதங்களில் சம்பளத்தை 5ந்தேதிக்குள் வழங்க வேண்டும்..
ஒத்துக்கொண்டபடி 26/03/2015க்குள்
சம்பளம் வழங்கவில்லை என்றால்
27/03/2015 முதல்
அறப்போர்
துவக்க தோழர்களே.. தயாராவீ ர்...
Tuesday, 24 March 2015
Sunday, 22 March 2015
Thursday, 19 March 2015
கிராம அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: தனி நீதிபதி குழு அமைக்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
அஞ்சல்துறை இயக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கிராமப்புறப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தனி நீதிபதி குழு அமைக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிராமப்புறங்களில் பணிபுரிந்து வரும் அஞ்சல்துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக அஞ்சல் விநியோகம் நடைபெறாததால் உரியவர்களுக்கு, உரியகாலத்தில் கடிதங்களும், அஞ்சல்களும் கிடைக்கப் பெறாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நடைபெறும் அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் கடிதப் போக்குவரத்துக்கு தனியார் துறைக்கு தள்ளிவிடப்படுகின்றனர். மத்திய அரசு ஊழியர் விரோதப்போக்கை உடனடியாக கைவிடவேண்டும். அஞ்சல்துறை இயக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கிராமப்புறப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவும் ஊதியம், வேலை தொடர்பாக பரிசீலிக்க தனி நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பதையும் ஏற்று போராட்டத்திற்கு தீர்வுகண்டு, கிராமப்புற அஞ்சல் பிரிவு மேம்பட்ட முறையில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
Tuesday, 17 March 2015
ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர விவகாரம்: என்எல்சி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதற்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு மீது என்எல்சி நிர்வாகம் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக "என்எல்சி இண்டோசர்வ் தொழிலாளர் ஊழியர் சங்கம்' சார்பில் அதன் தலைவர் கே. பரமசிவம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. ஆனந்த செல்வம் ஆஜராகி, "ஒப்பந்தப் பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை என்எல்சி நிர்வாகம் தற்போதுவரை அமல்படுத்த மறுக்கிறது. எனவே, என்எல்சி நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதைகேட்ட நீதிபதிகள், "இது தொடர்பாக என்எல்சி தலைவர் பி. சுரேந்திர மோகன் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
பின்னணி: என்எல்சி-இல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் சங்கத்தினர் 1996-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் சேர்ந்த தினத்தை அடிப்படையாக வைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 2008-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து என்எல்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் அதே ஆண்டில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் என்எல்சி-இல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பெயர் பட்டியலை அவர்கள் பணியில் சேர்ந்த தினத்தை குறிப்பிட்டு பணிமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் வெளியிட வேண்டும் என 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி 10,372 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக என்எல்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2013, ஏப்ரல் 13-ஆம் தேதி உறுதி செய்தது.
Saturday, 14 March 2015
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்
கிராமிய அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.
அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள்போல் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும், கிராமப்புற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நேரம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதன்படி, கும்பகோணம் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், குத்தாலம், குடவாசல் ஆகிய தாலுகாவில் உள்ள 155 கிராமப்புற அஞ்சலகங்களும் இயங்கவில்லை. இதில் பணியாற்றும் 356 ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4-வது நாளாக வெள்ளிக்கிழமை கும்பகோணம் தலைமை அஞ்சலக வாயில் முன் கையில் மண்சட்டி ஏந்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால், கிராமங்களில் அஞ்சல் பட்டுவாடா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் உதவி தொகை பட்டுவாடாவும் வழங்கப்படவில்லை. இதனால் முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரத்தநாட்டில்... அஞ்சல் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தின் பட்டுக்கோட்டை கோட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் துரைராசு, பொருளாளர் சோமு, முருகையன், பஞ்சவர்ணம், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்
Saturday, 7 March 2015
Subscribe to:
Posts (Atom)