தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Sunday, 28 December 2014

5 நாள் சம்பளத்தை பிடித்ததால் முன் கூட்டியே ஸ்டிரைக்: தொழிற்சங்கத்தினர் தகவல்


போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை (29–ந்தேதி) முதல் ஸ்டிரைக் செய்வதாக அறிவித்திருந்தாலும் இன்றே ஸ்டிரைக்கை தொடங்கி விட்டனர். இதுபற்றி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:–
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் சம்பந்தமாக முடிவெடுக்க கடந்த 2–ந்தேதி திருச்சி மாநாட்டுக்கு சென்றிருந்தோம். இதற்காக எங்களது சம்பளத்தை பிடித்தம் செய்து விட்டனர்.
இதேபோல் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் அனைத்து பஸ்டெப்போக்களிலும் கோரிக்கை மனு கொடுக்க சென்றிருந்தோம். இதில் ஈடுபட்ட தொழிலாளர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டுக்கு சென்றதற்காகவும் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் டிரைவர்– கண்டக்டர்களுக்கு குறைந்தது 5 முதல் 8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வாங்குகிற சம்பளத்தில் 5 ஆயிரம் போய் விட்டால் என்ன செய்வது? அதனால் தான் சம்பள பிடித்தத்தை கண்டித்து இன்று போராட்டத்தில் குதித்துள்ளோம்.
தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்காமல், போராட்டம் நடத்தும் அளவுக்கு பிரச்சினையை கொண்டு சென்றது போக்குவரத்து நிர்வாகம் தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment