தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday, 27 September 2018

NFTE - TMTCLU
15-09-2018 அன்று கடலூரில்  நடைபெற்ற TMTCLU  சங்கத்தின் மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மான்ங்களை இன்று (28-09-2018) மாவட்ட நிர்வாகத்திடன் கொடுப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம்  தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்...
                                                     தோழமையுடன் 
                                                    A .S .குருபிரசாத்
                                                    மாவட்டச் செயலர்.

                                              
                                                  கடித நகல்:



Saturday, 22 September 2018

குடந்தை மாவட்ட TMTCLU செயற்குழு கூட்டம்



சிறப்பான NFTE- TMTCLU  மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர்  தோழர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துவக்கயுரை TMTCLU மாவட்ட செயலர்   ராஜேஷ்.அவர்களும் தொடர்ந்து குடந்தை  மயிலை  சீர்காழி  ஆடுதுறை  திருப்பனந்தாள்  குத்தாலம்  காரை நாகை என அனைத்து கிளைசங்க பொருப்பாளர்களும் தங்களது மேலான சங்க வளர்ச்சிக்கும் இன்றைய நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் விளக்கமாக விவாதிக்கப்பட்டது மாவட்ட அழைப்பின் பேரில் வருகைதந்து சிறப்பாக கடலூர் மாவட்ட செயலபாடுகளை விளக்கி உற்சாக மூட்டிய  தோழர். M.Sகுமார்  மற்றும்  NFTE மாநில அமைப்பு செயலரின் அரவனைப்பான பேச்சோடு குடந்தை மாவட்ட செயல்பாடு மற்றும் போராட்டவழிமுறைளை வகுத்து சிறப்பு செய்த அடிதட்டு தோழர்களின் துயர்துடைக்கும் தோழர்  விஜய் அவர்கள் ஆற்றிய உரையாலும் இறுதியில்  TMTCLU மாநில செயலாளர் தோழர் செல்வம் அவர்களின் நம்பிக்கையூட்டும் விவாதங்களோடும் தோழர் நந்தகுமார் அவர்களின் நன்றி நவிதலோடு சிறப்பாக மாவட்டசெயற்குழு நிறைவு பெற்றது வருகைதந்து சிறப்பித்த மாநில மாவட்ட கிளைச்சங்க நிர்வாகிகளுக்கும் இச்செயற்குழுவை சிறப்பிக்க வருகைதந்து வாழ்த்திய தோழர்கள் குத்தாலம்  நாகராஜ் குப்புசாமி மயிலை தோழர்கள் குமார்  பாலு மற்றும்அனைத்து NFTE TMTCLU தோழர்களுக்கும் மனதார நன்றி  பாராட்டி மகிழ்கிறது.
குடந்தை TMTCLU மாவட்ட சங்கம்.

Saturday, 15 September 2018

NFTE - TMTCLU
  தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம், கடலூர்

15-09-2018   அன்று மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு நமது NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில்  சிறப்பாக நடைபெற்றதுதோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் வரவேற்புரையாற்றிட  தோழர் A.S.குருபிரசாத் மாவட்ட செயலர் ஆய்படு பொருள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  பின்னர் மாவட்ட உதவிச் செயலர் தோழர் G.ரங்கராஜ்  துவக்கவுரையாற்றிட  கள்ளக்குறிச்சி தோழர் ராஜா,  உளுந்தூர்பேட்டை பாஸ்கர், விருதை சக்திவேல் கடலூர் சுரேஷ், பண்ருட்டி ராஜா, நெய்வேலி பாலமுருகன், விழுப்புரம் கிளைச் செயலர் தோழர்  நடராஜன், தோழர் மணிமாறன் மற்றும்  பலர் கருத்துரை வழங்கினார்கள். வாழ்த்துரையாக NFTEயின் மாவட்ட உதவிச் செயலர் தோழர்D.குழந்தைநாதன்   தமது   கருத்துக்களை பதிவு செய்தார்.
சிறப்புரையாக  TMTCLU   மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம் நமது சங்க செயல்பாடுகளைப் பற்றி விரிவாக எடுத்து கூறினார். அடுத்து நமது NFTE  மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்  நமது நியாயமான கோரிக்கைகளை வலுவாக்கி வெற்றி பெற  நாம் இன்னும் பலத்தோடு செயலாற்றிட வேண்டும்.  விடுப்பட்ட தோழர்களை மீண்டும் பணியில் அமர்த்திடவும் , குறைந்த பட்ச போனஸ் வழங்கிட வலியுறுத்தி முதலில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது என்றும், பின்னர் தேவையெனில் தர்ணா நடத்த வேண்டும் என்றும் தமது உரையில் பதிவு செய்தார்.

இறுதியாக  மாவட்ட பொருளாளர் தோழர் J.கந்தன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

தீர்மான்ங்கள்
1.கடலூர் SSA வில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச போனஸ் ரூபாய் 7000/- வழங்கிட மாவட்ட நிர்வாகம்  உறுதி செய்திட வேண்டும்.
2.விடுமுறை நாட்களில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அன்றைய சம்பளத்தை  வழங்கிடுக
3. விடுபட்ட  தோழர்களுக்கு காலதாமதமின்றி உடணடியாக பணி வழங்கிடுக
4. ஒப்பந்த ஷரத்தின் படி  ஒப்பந்தகாரரின் அலுவலகத்தினை உடணடியாக அமைத்திட மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுத்திடுக.
5. 2009ஆம் ஆண்டிற்கான நிலுவை தொகையினை காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை எடுத்திடுக.
6. ஒப்பந்த ஊழியர்களின்  பிரச்சனைகளை கண்கானிக்க மாநில நிர்வாகத்தின் வழிகாட்டலின்படி  நோடல் ஆபிஸர் நியமித்திடுக.
7. கேபிள் பகுதியில் தேவைக்கேற்ப ஒப்பந்த ஊழியர்களை நியமித்திடுக..
8. ஒப்பந்த ஊழியர்களுக்கு வாடகைக்கு Quarters  வழங்கிடுக நடவடிக்கை எடுத்திடுக.
9. கேபிள் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு TRAVELLING ALLOWANCE வழங்கிட  நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
10. மாநிலச் சங்கத்தின் அறைகூவலின்படி 17-09-2018 அன்று மாலை ஆர்ப்பாட்டம்நடத்துவது என முடிவு  செய்யப்படுகிறது.
11. மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்ணயித்த ஊதியத்தை  நடைமுறைபடுத்திடுக..

மேற்கண்ட கோரிக்கைகள்  தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன...மற்றும் மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியினால் தோழர் பாலமுருகன்/ நெய்வேலி அவர்களுக்கு ESIC  முலம் மருத்துவ செலவு தொகை ரூபாய் 62000/- ஐ பெற்று கொடுக்க உறுதியாக செயல்பட்ட மாவட்ட சங்கத்திற்கு  நன்றிகள் பல...

தோழமையுடன்:- A.S.குருபிரசாத், மாவட்டச்  செயலர் , TMTCLU