தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday, 2 August 2018

தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் 
மாநிலச் சங்கம்

தோழர்களே!....
அன்புள்ள தோழர்களே வணக்கம் இன்று (31/07/2018) NFTE மாநில செயலர் தோழர் K.நடராஜன், TMTCLU மாநில செயலர் R.செல்வம்  BSNLEU மற்றும் Tntcwuமாநில தலைவர்  முருகையா சீனுவாசன் ஆகியோர் (DCLC) துணை தலைமை தொழிலாளர் நலஆணையர் அவர்களை சந்தித்து வரும் ஆண்டிற்க்கான போனஸ் பற்றியும் கேரள மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் 13 நாட்கள் விடுமுறை தமிழ் நாட்டில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்து  பேசினோம்
 அவர்கள் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து போனஸ் வழங்க ஏற்ப்பாடு செய்வதாகவும் லீவு சம்மந்தமாக பிறகு பேசலாம் என்று கூறினார் மாவட்ட செயலர்கள் மாநிலசங்க நிர்வாகிகள் தலமட்டங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து பேச்சுவார்த்தை துவங்குமாறு மாநிலச்சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
                                               
தோழமையுடன்
     R. செல்வம்.
பொதுச் செயலர்

                                                                       TMTCLU

No comments:

Post a Comment