தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday, 16 October 2017

ஒப்பந்த ஊழியர் போனஸ்
2017
தோழர்களே!..
           நமது  NFTE, BSNLEU,  TMTCLU, TNTCWU  நான்கு சங்கங்களின் சார்பாக  16-10-2017 அன்று மாபெரும் தர்ணா போராட்டம்  தோழர் R.செல்வம் மாவட்ட தலைவர் NFTE,                           தோழர் A. அண்ணாமலை மாவட்ட தலைவர் BSNLEU, தோழர் M.S.குமார் மாவட்ட தலைவர் TMTCLU, தோழர் S.V.பாண்டியன் மாவட்ட தலைவர் TNTCWU , ஆகியோரின் கூட்டுத் தலைமையில்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது. இந்தக்  தர்ணா கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும், 50க்கும் மேற்பட்ட நிரந்திர ஊழியர்களும், கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தில் அனைத்து சங்க மாநில, மாவட்ட , கிளை சங்க நிர்வாகிகள்  கண்டன உரையாற்றினார்கள்.   தர்ணா போராட்டத்தினை வாழ்த்தி  தோழர் R.அசோகன் CWC Member ( SNEA ) உரையாற்றினார். இறுதியாக தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் TMTCLU,கடலூர் நன்றியுரை கூற தர்ணா போராட்டம் நிறைவுற்றது.
         நமது  தொடர்  போராட்டத்தின் காரணமாக  நிர்வாகம்   சென்ற ஆண்டு இருந்த EXSERVICEMEN SECURITY-PONDY, NACCS- MADURAI, SRI BALAJI AGENCIES  ஆகியோரிடம்  பேசி  ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்  உறுதிபட தெரிவித்தனர். அதன் விளைவாக   ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது.
Zone – I (NACCS- MADURAI) – Rs 2130  Sri BALAJI AGENCIES) Rs 2173 = Rs 4303/-
EOI - SRI BALAJI AGENCIES  - Rs 3600/-
Cable and other Zone Sri BALAJI AGENCIES– Rs 2256 +  (EXSERVICEMEN SECURITY-PONDY) Yet to be Credited .
        SRI BALAJI AGENCIES  01-06-2017   முதல் ஒப்பந்த எடுத்ததன் காரணமாக இந்த  நான்கு மாத்திற்கான போனஸ்  தருவதாகவும், மீதி  தொகையினை மார்ச்-2018ல் தருவதாகவும்  நிர்வாகத்திடம் உறுதிபட தெரிவித்துள்ளார். அதனை நமது மாவட்ட செயலர்களிடம்  முதுநிலை பொதுமேலாளர் அவர்கள் தெரிவித்ததுமட்டுமில்லாமல் தர்ணா போராட்டத்தினை   முடித்து கொள்ளுமாறும், போனஸ் பிரச்சனை  இனிமேல் வராமல்  இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் கூறினார். அதன்படி  நமது இந்த தர்ணா போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
        குறிப்பு:- சென்ற ஆண்டு  ரூபாய் 2000/- கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது
        இந்த தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,,,,ஆதரவளித்த  SNEA, AIBSNLEA மாவட்ட சங்கங்களுக்கும் நன்றி...
     தோழமையுடன்
NFTE – BSNLEU – TMTCLU - TNTCWU

மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.
No comments:

Post a Comment