தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Sunday, 2 July 2017

TMTCLU - மாவட்டச் செயற்குழு  - 28-06-2017

         மாவட்ட செயற்குழு  மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் NFTE  மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  வரவேற்புரையாக தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் TMTCLU கடலூர் அனைவரையும் வரவேற்றார். தோழர் G.ரங்காரஜ் மாவட்ட செயலர் அறிமுகவுரையாற்றினார். தோழர் A.சுப்ரமணியன் மாநில உதவிச் செயலர் TMTCLU நமது மாவட்ட சங்கம் மிகவும் நேர்த்தியாகவும்  தொழிலாளர்களின் மிகுந்த அக்கரையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் மிக விரைவில் எங்களது பகுதியில் கிளை மாநாடு நட்த்த திட்டமிட்டுள்ளோம் என்று தமது உரையில் பதிவு செய்தார்.  தோழர் V.இளங்கோவன் மாநில சிறப்பு அழைப்பாளர், NFTE/கடலூர்,  கடலூர் வெளிபுறப்பகுதி செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி , பொது மேலாளர் அலுவலக கிளைச் செயலர்  S.ராஜேந்திரன் மற்றும் தோழர் D.குழந்தைநாதன் மாவட்ட உதவிச் செயலர் NFTE/கடலூர் ஆகியோர்   வாழ்த்துரை வழங்கினார்கள். 
தோழர் R.ராஜேஷ்  மாவட்ட செயலர் TMTCLU குடந்தை , தமது உரையில்  எங்களது குடந்தை பகுதியில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் 8 மணி நேரமாக மாற்றியுள்ளோம் . இதனை நமது NFTE மாவட்டச் சங்க  துணையோடு TMTCLU  சங்கம் வென்றுள்ளது என்பதனை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். தொடர்ந்து நாம் NFTEயின் துணையோடு வென்றெடுக்க வேண்டிய கோரிக்கைகள் நிறைய உள்ளது. எங்களது மாவட்டத்தில் நமது சங்கத்தின் செயல்பாட்டால்  ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 200 மேற்பட்ட தோழர்கள் நமது TMTCLU  சங்கத்தில் உள்ளனர் என்பதனை பெருமையோடு சொல்லிக் கொள்கின்றேன். அதனால் நாம் ஒற்றுமையுடன்  செயல்பட வேண்டும் என்று தமது உரையில் பதிவு செய்தார். அடுத்தப்படியாக தோழர் D.சண்முகராஜ்  STR கிளைச் செயலர் TMTCLU , புதுவை அவர்களும் நமது மாவட்ட செயற்குழுவை வாழ்த்தி  பேசினார். தோழர் A. அதியமான் மாநில துணைத் தலைவர் TMTCLU, குடந்தை  தமது உரையில் கடலூர் மாவட்ட சங்கம் பல தரப்பட்ட போட்டி சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . அவர்களுடைய செயல்பாடுகள் மேன்மேலும் சிறப்படைய மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
        நமது மாநில இணைப் பொதுச் செயலர் தோழர் சு தமிழ்மணி  நமது சங்கம் இன்னும் அதிவேகமாக செயல்பட வேண்டும். நாம் பெற வேண்டிய சலுகைகள் இன்னும் ஏராளம் . அதற்கு நாம் ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டி உள்ளது என்று தமது சிறப்புரையில் பதிவு செய்தார். மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம்   நமது தமிழ் மாநிலச் சங்கம் 30 நாட்கள் சம்பளம் பெற வழக்காடு மன்றம் சென்றுள்ளோம் என்றும் மிக விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார். அதே போல சம வேலைக்கு சம ஊதியம்   வழிவகை செய்து வருகிறோம்  என்று கருத்துகளை தெரிவித்தார். மற்றும் கேரள் மா நில நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவினை போல நமது தமிழ் மா நிலத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியருக்கும் பணித்தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.   நமது தொடர் முயற்சியின் காரனமாக நிர்வாகமும் இசைவு தெரிவித்துள்ளது என்பதனை இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.   நமது NFTE  மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் நமது மாவட்டத்தில் 150 மேற்பட்ட தோழர்கள்  பகுதி நேர ஊழியர்களாக பணி புரிகின்றனர் . நமது NFTE - TMTCLU சங்கத்தின் துணையோடு அவர்களுக்கு முழு நேர ஊழியர்களாக மாற்றிட  போராடுவோம். அதற்கு நாம் இன்னும் அதிக சக்தி வாய்ந்த இயக்கமாக மாறிட  நமது TMTCLU சங்கத்தில் அதிக உறுப்பினர்களை இணைத்து போரடுவோம். வெற்றி நமதே  என்று அவரது சிறப்புரையில்  பதிவு செய்தார். இறுதியாக தோழர் S.அண்ணாதுரை மாவட்ட பொருளாளர் TMTCLU மாவட்ட செயற்குழுவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
        தோழமையுடன்
              G.ரங்கராஜ்
  மாவட்டச் செயலர்,கடலூர்.


No comments:

Post a Comment