தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 21 September 2016

கோரிக்கை விளக்க கூட்டம்

அன்பார்ந்த ...தோழர்களே ... TMTCLU வின் கவன ஈர்ப்பு ஆர்பாட்ட கோரிக்கைகள் குறித்து வரும் 30.9.2016 அன்று CGM முன்னிலையில் விவாதித்து ...தீர்வு கண்டிட தமிழ் மாநில நிர்வாகம் NFTE மாநில சங்கத்திடம் கேட்டு கொண்டதன் அடிப்படையில் 22.9.2016 அன்று நடைபெறவிருந்த TMTCLU வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் " கோரிக்கை விளக்க" கூட்டமாக நடத்திட NFTE TMTCLU மாநில சங்கம்  கேட்டுகொள்கிறது .நன்றி  தோழமையுடன் ....பொது செயலர் ...செல்வம் ...TMTCLU


Wednesday, 14 September 2016

தமிழ் மாநில செயற்குழு TMTCLU குடந்தை



மாநில செயற்குழு முடிவுப்படி 
மாநிலம் முழுவதும் ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகள் வலியுறுத்தி 
22.9.2016 வியாழன் -கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 
திரளாய் பங்கேற்ப்பீர் !

Tuesday, 13 September 2016

மாவட்ட மாநாடு TMTCLU குடந்தை

ஊரை எழுப்பிடவே - துயர் ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் !
 NFTE மண்ணில் முளைத்தவன் நான் ...!
அதன் மார்பில் திளைத்தவன் நான் ! எண்ணி துணிந்துவிட்டேன் !
அநீதி எதிர்த்திடுவேன் ....அடித்து துரத்திடுவேன் ! 
என முழக்கத்தோடு ....திரள் தோழர் கூட்டத்தில் ..
தோழர் எம் ஆர் தேசிய கொடி உயர்த்த ...ஜோதி சங்க கொடி உயர்த்த 
துவங்கியது ....உற்சாகமாய் !
மாவட்டத்தின் பல பகுதி ஒப்பந்த ஊழியர்கள் ..பிரச்சினைகள் எடுத்துரைக்க ...

தோழர்கள் .ஜெயபால் .லட்சம் .செல்வம் ,தமிழ்மணி  வாழ்த்துரைக்க ..
தோழர்கள் .நடராஜன் ..மாநில செயலர் ..காமராஜ் ...மாநில தலைவர் 
வழிநடத்தும் உரை தர ...
SEWA மாநில தலைவர் .தோழர் .G .கனகராஜன் ...
PEWA மாநில செயலர் .தோழர் .N.பாலகிருஷ்ணன் ..
TEPU மாவட்ட செயலர் தோழர் .T .ஜெயராமன் ...
 SNEA தலைவர் திரு கபிலன்  என தோழமையாளர்கள் 
 வருகை தந்து வாழ்த்துரைக்க ...குடந்தை மாவட்ட நிர்வாகிகளாக ...
தோழர்கள் .சந்திரசேகர் -ராஜேஷ் -அசோக்குமார் ...தேர்வாகினர் ...
துள்ளல் ...உற்சாகம் ...வேகம் ...கோபம் ...பிரதிபலிக்க  
மாவட்ட மாநாடு ....!!! சிறக்க வென்றது !