தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 17 February 2016

TMTCLU -வின் எழுச்சிமிகு  செயற்குழு.

          நமது தஞ்சை மாவட்ட TMTCLU  செயற்குழு 25-01-2016 மாலை 5 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.    100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.  செயற்குழுவை கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி தோழர்கள் முன்னின்று நடத்தினர்.

          TMTCLU மற்றும் NFTE கிளைச் செயலர்கள் தங்களது பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள்.    மாவட்டச்  செயலர் தோழர். கலைச்செல்வன், நாடிமுத்து, R.K. ராஜேந்திரன், மாநிலத் துணைச் செயலர் தோழர். நடராஜன், கிள்ளி , T. பக்கிரிசாமி, சிவசிதம்பரம் ஆகியோர் நிலைமைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள்.      மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து  கடுமையான போராட்டத்தை நடத்துவதுதான்   பிரச்சினை தீர்வுக்கு வழி என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

          இறுதியில் மாநிலச் செயலர் தோழர். R. செல்வம் நிறைவுப் பேருரையாற்றினார்.   மாநிலச் சங்கத்தின் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நீதிமன்றம் போகப் போவதையும் அதற்கான காரணத்தையும் விளக்கமாகக் கூறினார்.   தீவிரமான போராட்டத்தை தஞ்சை மாவட்டம் நடத்திட வேண்டும்.   அதன் மூலம்தான் நாம் பல்வேறு மாற்றங்களை மாநிலம் முழுமைக்கும் கொண்டுவர இயலும் என்றார்.   உங்கள் போராட்டத்திற்கு மாநிலச் சங்கம் முழுமையாக  துணை நிற்கும் என்றும் கூறினார். 

          தஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக RTI  யில் விளக்கம்  கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.       

No comments:

Post a Comment