தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday 12 October 2015


டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி வழங்கப்படாது: 
அரசு அரசாணை வெளியீடு

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில். மீத்தேன் வாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய, தமிழக அரசால் தனிக் குழு அமைக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 691 சதுர கி.மீ. பரப்பில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனம் உத்தேசித்த நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்நீர் உட்புகுதல், வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் விளைவு, மாசற்ற எரிசக்தி வளங்களை மேம்படுத்துதலின் தேவை ஆகியவை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரின் தலைமையின் கீழ், தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிடம் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.



இதன்படி, தொழில்நுட்ப வல்லுநர் குழு தனது அறிக்கையைப் பரிந்துரைகளுடன் அரசுக்கு அளித்தது. இதை அரசு கவனமாகப் பரிசீலித்தப் பிறகு, தொழில்நுட்ப வல்லுநர் பரிந்துரைகளை ஏற்று இத்திட்டத்துக்குத் தமிழக அரசால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படாது என முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகைப் பகுதியில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்தவிதமான முயற்சியையும் தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

NFTE TMTCLU சார்பில் குடந்தையில் நடைப்பெற்ற தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி  


No comments:

Post a Comment