தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday, 28 August 2017

சம வேலைக்கு சம ஊதியம்
நீதிமன்ற வழக்கு

நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட நமது TMTCLU சங்கத்தின்  சார்பில் போடப்பட்ட வழக்கு இன்று (28/08/2017 ) காலை விசாரனைக்கு வந்தது. அதனை விசாரித்த மதிப்பிற்குறிய நீதிபதி அவர்கள் உடனே சம்மந்தப்பட்ட  BSNL மாநில நிர்வாகத்திற்கும், கார்ப்பரேட் அலுவலகத்திற்கும் விசாரனைக்கு வருமாறு கடிதம் அனுப்ப உத்திரவிட்டுள்ளார்.  ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய மாற்றத்தில் நல்ல முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
   தோழமையுடன்
R.செல்வம்
 மாநில பொதுச் செயலர்

  TMTCLU.

Sunday, 27 August 2017

சம வேலைக்கு சம ஊதியம்

 நமது நிறுவனத்தில் பணிபுரியும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட நமது மாநிலச் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் சென்ற வாரம் வழக்கு தொட்டுத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்  (வழக்கு எண் WP 22823/2017). மிக விரைவில் நல்ல முன்னேற்றம் வரும் என்பதனை மகிச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                                               
              தோழமையுடன்
                                                                            R.செல்வம்

                                                      பொதுச் செயலர்  TMTCLU

Saturday, 26 August 2017

TMTCLU
மாவட்ட செயற்குழு  (23-08-2017)

நமது TMTCLU  மாவட்ட சங்கத்தின் சார்பில் 23-08-2017 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர்  தோழர் M.S.குமார் தலைமையில்  நடைபெற்றது. வரவேற்புரையாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் M.மணிகண்டன்  செயற்குவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். துவக்கவுரையாக மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜ்  உரையாற்றினார். பின்னர் விழுப்புரம் கிளைச் செயலர் தோழர் S. நடராஜன்  ,சிதம்பரம் கிளைச் செயலர் D.ரவிச்சந்திரன் , திண்டிவனம் Y.ஹாரூன் பாஷா கிளைச் செயலர், கடலூர் கிளைச் செயலர் R.பன்னீர்செல்வம் , கள்ளக்குறிச்சி கிளைச் செயலர் தோழர் S.மணி NFTE, மற்றும் மாநில துணை செயலர் தோழர் A.சுப்ரமணியன், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் V.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் தோழர் P.ராஜா, மாவட்ட உதவிச் செயலர்  தோழர் கிருஷ்ணகுமார், மாவட்ட துணைத் தலைவர் தோழர் E.பாலமுருகன், சிதம்பரம் கிளைப் பொருளாளர் தோழர் K.சுந்தர், கடலூர் (O/D) கிளைச் செயலர் தோழர் E. விநாயகமூர்த்தி ஆகியோர் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

சிறப்புரையாக தோழர் R.செல்வம் மாநிலப் பொதுச் செயலரின் உரையில் நமது சங்கம் 30 நாட்கள் சம்பளத்திற்கு  நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளோம். அதுமட்டுமில்லாமல்   நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஓப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம்   கிடைத்திடவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று இச்செயற்குழுவின் வாயிலாக  தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். மற்றும் போனஸ் எல்லா மாவட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன் கூட்டியே கிடைத்திட மாநில நிர்வாகத்திற்கும் DCLCக்கும் NFTE சங்கத்தின் சார்பில் இணைந்து கடிதம் கொடுத்துள்ளோம் . ஆதலால்  நமது தொழிலாளர் நலனே என்ற குறிக்கோளோடு நாம் தொடர்ந்து பயனிக்கிறோம் என்று தமது கருத்தினை பதிவு செய்தார்.

சிறப்புரையாக தோழர் S. நடராஜன் மாநிலச் செயலர் NFTE  அவர்களின் உரையில் நமது NFTE-TMTCLU சங்கங்கள் தொடர்ந்து  தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மைகேற்ப ஊதியம் கிடைத்திட நாம் தாம் வழிவகை செய்தோம் .ஆனால் சிலர் தம்பட்டம் அடித்து கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்கள். ஆகவே தோழர்களே  NFTE-TMTCLU சங்கங்கள் இணைந்து தொழிலாளர்களின் நலனுக்காக தொடந்து நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.அதுமட்டுமில்லாமல்  நமது அடுத்த இலக்கு சம வேலைக்கு சம ஊதியம் கிடைத்திட போராட நாம் தயாராக வேண்டும். TMTCLU சங்கத்தினை பலப்படுத்துவோம்.


இறுதியாக நமது NFTE  மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் பேசுகையில் நமதுமாவட்டத்திலிருந்து  ஒரு கிளையை தவிர்த்து மற்ற அனைத்து கிளைகளிலிருந்து வந்திருந்த அனைவரையும் வெகுவாக பாராட்டியதோடு மட்டுமில்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிரச்ச்னை வரும் போதெல்லாம் நாம் தொடர்ச்சியாக சரி செய்து வருகிறோம் என்றார். இந்த மாவட்டத்தில் நீங்கள் தான் பலம்பொருந்திய சங்கமாக மாற  வந்திருந்த அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார். இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் தோழர் V.கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.






தீர்மானங்கள்

v நமதுமாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2017 ஆம் ஆண்டிற்கான போனஸாக ரூ 7000/-ஐ வழங்கிட மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தகாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்ய வேண்டும் இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v அனைத்து தொழிலாளருக்கும் அடையாள அட்டை வழங்கிட உடணடியாக உத்திரவிட வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v 19-01-2017 முதல் நிலுவை தொகையினை உடணடியாக  வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

v பணியிலிருந்து விடுபட்ட தோழர்களை மீண்டும் பணியில் உடணடியாக சேர்த்திட தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v பணித்தன்மைக்கேற்ப ஊதியம்  வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்தின் உத்திரவை கறாராக அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

v டெலிகாம் டெக்னிசியன் இல்லாத தொலைபேசி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்றிட இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 8ந் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டமும்  16-09-2017 அன்று மாவட்ட தலை நகரில் தர்ணா போராட்டமும் நடத்திட இச் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

       தோழமையுடன்
        TMTCLU,NFTE

மாவட்டச்சங்கங்கள்,
             கடலூர்.

Sunday, 13 August 2017

TMTCLU
மூன்றாவது கிளை மாநாடு, விழுப்புரம்

13.8.2017 காலை விழுப்புரம் தொலைபேசி நிலைய வாயிலில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த சங்கக் கொடிக்கம்பத்தில் கொடி யேற்றத்துடன் துவங்கியது. மாநில உதவிசெயலர் தோழர் AS.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டத் தலைவர் தோழர் MS.குமார் கொடியேற்றிட, மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு விண்ணதிரும் கோஷமிட்டார். NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உரையாற்றினார்.
பின்னர் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள மாவட்ட AITUC அலுவலகத்தில் மாநாடு துவங்கியது. தோழர் AS.சுப்பிரமணியன் தலைமையில் தோழர் S.நடராஜன் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.  தோழர் S.சண்முகம் அஞ்சலி உரையாற்றினார்.

TMTCLU மாநிலப் பொருளாளரும், குடந்தை NFTE மாவட்ட செயலருமான தோழர் விஜய்ஆரோக்கியராஜ் துவக்க உரையாற்றினார்.  முழு உரை பின்னர்)