தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday, 21 July 2015

குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 15000 கேட்டு போராடும் தொழிலாளியே 
தெரிந்து கொள் ......
புதுடில்லி :தொழிலாளர்கள் மாநாட்டை துவக்கி 

வைத்து பேசிய பிரதமர் மோடிமுன்னாள் 

அமைச்சர்களின் பென்ஷன் ரூ.1 லட்சமாக 

உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார் 

ஆளும் மத்திய அரசு யாருக்கானது 

என்பதை தெரிந்துகொள் !

Friday, 17 July 2015


அஞ்சலி 
தோழர் இஸ்லாம் அவர்களின் தாயார் 
17.7.2015 இன்று இயற்கைஎய்தினார் 
என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன் 
தெரிவித்துக்கொள்கிறோம் .

Monday, 13 July 2015

மத்தியில் பாஜக அரசு செயலற்றதாக உள்ளது: குருதாஸ் தாஸ்குப்தா





மத்திய பாஜக அரசு செயலற்றதாக ஓராண்டைக் கடந்திருக்கிறது என்றார் ஏஐடியூசி பொதுச் செயலரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான குருதாஸ் தாஸ்குப்தா.
 திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏஐடியூசி தொழிற்சங்கக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 
 1920-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தில் தற்போது 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 
 மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 தொழிற்சங்கங்களில் மூன்றாவது இடத்தில் இது உள்ளது.
 இதன் 41-ஆவது அகில இந்திய மாநாடு வரும் டிசம்பர் 15-18 தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பிரச்னைகளையும், விவசாயத் தொழிலாளர்களின் பிரச்னைகளையும் முன்வைத்து இந்த மாநாடு நடைபெறும்.
 ஏஐடியூசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து, வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துகின்றன. 
 கடந்த 2013-இல் இரு நாள்கள் இதேபோன்ற வேலைநிறுத்தம் நடைபெற்றது. 
 தற்போது ஆட்சி மாறியிருக்கிறது; ஆனால் மக்கள் விரோதக் கொள்கைகள் மாறவில்லை.
 ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்கின்றனர், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக உயர்ந்து வருகின்றனர். 
 லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை கைவிடப்படவில்லை. 
 தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம் செய்யப்படுகின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்டம் அவசரமாகக் கொண்டு வரப்படுகிறது. 
 ஆனால் மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறது. 
 10 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
 எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ரூ. 15 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்றார் குருதாஸ் தாஸ்குப்தா.
 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தற்போதைய போக்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நிச்சயமாக திருப்திகரமாக இல்லை என்றார் அவர்.
இந்த கூட்டத்தில் நமது NFTE மற்றும் TMTCLU  சார்பில் திருச்சி தோழர் மனோகரன் ,தர்மபுரி மணி ,TMTCLU  மாநிலபொருளர் குடந்தை விஜய்  ஆகியோர் கலந்துகொண்டனர் .