தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com
Tuesday, 29 May 2018
Friday, 18 May 2018
Wednesday, 16 May 2018
வருந்துகிறோம்
நமது ஈரோடு மாவட்டம்
கவுந்தம்பட்டி தொலைபேசி நிலைத்தில் பணிபுரியும்
தோழியர் திலகவதி ஒப்பந்த ஊழியர்
அவர்கள் 15-05-2018 அன்று இயற்கை
எய்தினார் என்பதனை ஆழந்த வருத்த்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும்
அவரது குடும்பத்தாருக்கு நமது மாநிலச் சங்கத்திற்கு சார்பாக நமது அஞ்சலியை
உரித்தாக்குகிறோம். தோழியரின் கணவர் ஒரு வருடத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார்
என்பது குறிப்பிடத்தக்கது..
தோழியரின் குடும்பத்திற்கு
நம்மால் இயன்ற உதவியை செய்வோம்...
வருத்தத்துடன்
R.செல்வம்
மாநிலச் செயலர்,
TMTCLU
Sunday, 1 April 2018
வருந்துகிறோம்
நமது மாநிலச் செயலர்
தோழர் K. நடராஜன் அவர்களின் தாயார் இன்று
(02-04-2018 ) காலை இயற்கை எய்தினார்
என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவால்
வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது
மாவட்ட சங்கங்களின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் 03-04-2018
அன்று அவரது சொந்த ஊரான திருவாரூர் வடக்கு
வீதி , முதலியார் தெருவிலுள்ள அவரது இல்லத்திலிருந்து காலை 10.00மணியளவில் புறப்பட்டு சென்று நல்லடக்கம் செய்யப்படும் என்பதனையும்
தெரிவித்துக் கொள்கின்றோம்
BY
NFTE-TMTCLU
மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.
Friday, 16 February 2018
NFTE
– TMTCLU
மாநிலச் சங்கச் சிறப்பாய்வு கருத்துக் கேட்பு கூட்டம்
நமது தமிழ்மாநிலத் தொலைத்தொடர்பு
ஒப்பந்தத்
தொழிலாளர்
சங்கத்தின்
மாநில
அளவிலான
சிறப்பு
அமர்வு
14—02—2018ல்
சிதம்பரத்தில்
மிகச்
சிறப்பாக
நடைபெற்றது. சேலம் தோழர் சண்முகசுந்தரம்
தலைமை
வகித்தார். சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 10 மணிக்குத் துவங்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுமையிலிருந்தும்
வந்திருந்த
TMTCLU மற்றும் NfTE சங்கத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக்
கடலூர்
ஒப்பந்த
ஊழியர் சங்கத்தின்
மாவட்டச்
செயலாளர்
தோழர்
A.S. குருபிரசாத்
வரவேற்றார். அதனை தொடர்ந்து சிதம்பரம் கிளைச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன் அஞ்சலியுரையாற்றினார்.
மாநிலப்பொருளாளர்
தோழர்
எம்.
விஜய்
ஆரோக்கியராஜ்
சிறப்புக்
கூட்டத்திற்கான
அவசரத்
தேவை
மற்றும்
எதிர்நோக்கியுள்ள
பிரச்சனைகளின்
கடுமையை
விவரித்தார். அதை எதிர்கொள்ள பலமான அமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த அமைப்பின் நிதி நிலமை பலமானதாக இருக்க வேண்டியதும் மிகமிக அவசியம் என்பதை விவரித்துக் கூறினார். எனவே நமது சங்கத்தின் நிதிநிலமையை நாம் விரும்புகின்ற
அளவு
முன்னேற்ற
சந்தா
முறைப்படுத்தல்
உடனடிக்
கடமையாகக்
கொள்ள
வேண்டும். தோழர்களும் தாமே முன்வந்து சந்தா செலுத்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மாநிலப் பொதுச்செயலாளர்
தோழர்
ஆர்.
செல்வம்
கூட்டத்திற்கான
ஆய்படு
பொருளை
அறிமுகம்
செய்தபின்,
NFTE மாநிலத்
தலைவர்
தோழர்
P. காமராஜ்
BSNL நிர்வாகம்
நிதி
நெருக்கடி
காரணமாக,
சிக்கன
நடவடிக்கையாக, ஒப்பந்த முறையிலான செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு செய்ய, ஒப்பந்த முறைப் பணிகளைச் சீரமைப்பு செய்ய எண்ணுகிறது. இது எதார்த்தமாக நம்முன் உள்ள நிலமை. இதனை ஏற்க முடியாது என ஒற்றைவரியில் நாம் சொல்லிவிட முடியாது. மாறாக, ஆட்குறைப்பை அதிக பாதிப்பு இல்லாமல், அதிகபட்சமான தொழிலாளர்களின்
பணியை
உறுதி
செய்கின்ற
வகையில்
நாம்
திட்டமிட
வேண்டும். அதனை ஆலோசிப்பதற்காகவே
நாம்
இங்கு
கூடியிருக்
கின்றோம், நிச்சயமாக வெற்றிகரமாக இதனைக் கையாள்வோம் என உறுதிபடக் கூறினார்.
அதன்பின்னர் 12 மாவட்டங்களிலிருந்து
வந்திருந்த
மாவட்டச்
செயலாளர்கள்,
மாவட்டப்
பொறுப்பாளர்கள்
சுருக்கமாக தங்கள் கருத்துகளை நேர்த்தியாக எடுத்துக் கூறினர்.
அதனையடுத்து தஞ்சை NFTE மாவட்டச் செயலாளர் தோழர் கிள்ளிவளவன் தங்கள் பகுதி நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்கள் அதிகம் எனக் கூறி வருகிறது. அதனை உரிய வழியில் சரிசெய்து நமது தொழிலாளர்களைப்
பாதுகாப்பது
நமது
தலையாய
கடமையாகும்
என்றுரைத்தார்.
கடலூர் NFTE மாவட்டச் செயலாளர் தோழர் இரா.ஸ்ரீதர் தமிழ் மாநிலச்
சங்கம்
அங்கீகரித்த
( TMTCLU) ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயல்பாட்டிற்கு
கடலூர்
மாவட்டச்
சங்கம்
உறுதுணையாக
இருக்கும்
என
உறுதி
கூறினார்.
தோழர்களின் கருத்துரைகளின்
அடிப்படையில்
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன
(தீர்மானங்கள்
தனியே)
நிறைவுரையாக NFTE மாநிலச் செயலாளர் அருமைத் தோழர் கே. நடராஜன் அவர்கள் பேசும் போது, TMTCLU மாநிலச் சங்கம் தோழர் ஆர். செல்வம் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு
வருகிறார் எனப்
பாராட்டு
தெரிவித்தார்.
TMTCLU மாநிலச்
சங்கம்
எடுக்கும்
ஒவ்வொரு
தீர்மானத்திற்கும்
NFTE மாநிலச் சங்கமும் மத்திய சங்கமும் உறுதுணையாக நிற்கும் என அறிவித்தார். மேலும், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட
வழிமுறைகளுக்கு
மாறாகவோ
அல்லது
மாநில
நிர்வாகத்
தலைமை
மாறும்போது
நிலமை
கடுமையாகுமென்றால்
நிச்சயம்
போராடித்
தொழிலாளர்
நலம்
காப்போம்
எனச்
சூளுரைத்தார்.
இறுதியாக, மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஆர். செல்வம் தொகுத்து உரையாற்றினார். அவர் தமது தொகுப்புரையில் NFTE மாநிலச் சங்கத்தோடு இணைந்து பணியாற்றுவதால்
நம்மால்
சாதிக்க
முடிகிறது. நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் சமவேலைக்குச் சம ஊதியம், ஊதியத்துடன் கூடிய வாராந்திர ஓய்வு முதலிய வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. சாதகமானத் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மாநில நிர்வாகத்துடன்
தொடர்ந்து
பேச்சுவார்த்தை
நடத்தி
பல
சாதகமான
மாறுதல்களைச்
செய்து
வருகிறோம். நமக்குத் தேவை ஒற்றுமை. மேலும் ஊழியர்களை நமது சங்கத்தின் பால் திரட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சிறப்புக் கூட்டத்திற்கான
ஏற்பாடுகளைச்
செய்த
சிதம்பரம்
தோழர்களுக்கு
நன்றி
கூறினார்.
குறிப்பாக
காலை
மாலை
தேனீர்
வழங்கிய
சிதம்பரம்
தோழர்களுக்கும்
மதிய
உணவு
வழங்கிய
தோழர்
இரா
ஸ்ரீதர்
அவர்களுக்கும்
நன்றி
கூறினார்.
இறுதியில் சிதம்பரம் NFTE கிளைச் செயலாளர் தோழர் V. கிருஷ்ணமூர்த்தி
நன்றி
கூற
கருத்தாய்வுக்
கூட்டம்
நிறைவடைந்தது.
தீர்மானங்கள் :
- 1. ஒப்பந்தத் தொழிலாளர் ஊதியப் பிரச்சனைக்கு BSNLEU சங்கத்துடன் இணைந்து போராடி மாதாந்திர ஊதியத்தை உறுதிப்படுத்திய மாநிலச் சங்கத்திற்கு நன்றி.
- 2. அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கம் BSNL நோடல் அதிகாரி கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
- 3. TMTCLU மாநில மாநாட்டை மே மாதத்தில் நடத்துவது .
- 4. ஒப்பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பைத் தன்னிச்சையாக நடைமுறைப் படுத்துவதைத் தடுத்து நிறுத்தி, அதற்கு மாறாக, NFTE மாநிலச் சங்கம் வழங்கிய வழிகாட்டலைச் சரியானது என ஏற்றுக் கொள்வது.
- 5. பணித் தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
- 6. சிறப்புக் கூட்டம் நடத்த உதவிய கடலூர் மாவட்டச் சங்கங்களுக்கும் சிதம்பரம் கிளைக்கும் நன்றி பாராட்டுதல்.
Subscribe to:
Posts (Atom)







