தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 13 December 2017

நன்றி ..நன்றி ...


Image result for RED salute images
கூட்டங்களில் மட்டும்  BSNL காப்போம் என முழங்கும் 
வெட்டி பேச்சாளன் அல்லாது ...

பணி  ஓய்வு கூட்டத்திலும்  BSNL  காப்போம் என அறிவுரை 
தரும் நேரம் விழுங்கும் சம்பிரதாய பேச்சாளன் அல்லாது ...

புள்ளி விபரம் தந்தது ...BSNL காப்போம் எனும் 
காகித புலியாக  இல்லாது ...

எங்கள்  வாழ்வும் ...எங்கள்  வளமும்  ... 
மங்காத இயக்கமும் ...BSNL  நிறுவனமேவென   ...

இட்ட குரல் ...எட்டுமுன்னே ...
ஊதியம் உதறி தள்ளி ...

இருநாள் வேலை நிறுத்தத்தில் ...
உணர்வாய் கலந்திட்ட ...

ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும் ...
இருகரம் கூப்பிய நன்றி ..நன்றி ...

தோழமையுடன் 
ஆர் .கே           R .செல்வம்          M .விஜய் 




Wednesday, 6 December 2017

TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
கடலூர்.

 மாவட்ட செயற்குழு  


08-12-2017 அன்று மதியம் மதியம் 2.30 மணியளவில் நமது NFTE  தொழிற்சங்க அலுவகலத்தில் மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு  நடைபெறும். செயற்குழுவிற்கு வருகை தரும் மாவட்ட சங்க , கிளைச் சங்க தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                                                       தோழமையுடன்
                                                                                                            G.ரங்கராஜ்
                                                                                             மாவட்ட செயலர் TMTCLU

   கடலூர்.