தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com
Saturday, 30 April 2016
Monday, 4 April 2016
தோழர்.கார்த்தி
குடும்ப நிவாரண நிதி
அன்பு வேண்டுகோள்
சென்னை ஜெகன் இல்லத்தில்
நமது NFTE சங்க அலுவலகத்தில்
பணி புரிந்த தோழன்.கார்த்தியின்
அகால மரணம்
நம் நெஞ்சை விட்டு அகலாதது.
சிதம்பரம் புவனகிரி பகுதியில்
சமுதாயத்தின் அடித்தட்டில் பிறந்த
கார்த்தியின் குடும்பம் மிகப்பெரியது.
சமூகத்திலும், பொருளாதாரத்திலும்
மிகவும் பின் தங்கிய குடும்பம்
மிகவும் பின் தங்கிய குடும்பம்
தோழர்.கார்த்தியின் குடும்பம்.
கார்த்தியை நம்பி இருக்கும்
வயதான தந்தை, தாய் மற்றும் சகோதரர்கள்
இப்போது நிர்க்கதியாய் நிற்கின்றார்கள்.
கார்த்தியின் சேவையை நினைவு கூறும் நாம்
கார்த்தியின் இடத்தில் இருந்து அந்தக்குடும்பத்திற்கு
உதவிக்கரம் நீட்ட வேண்டியது நமது கடமையாகும்.
எனவே கீழ்க்காணும் தோழர்களைக் கொண்ட
உதவிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தோழர் .கார்த்தியின் குடும்ப நிவாரண நிதிக்கு தோழர்கள்
மனமுவந்து நிதி தந்திட அன்புடன் வேண்டுகிறோம்.
நமது மாவட்டச்செயலர்கள், கிளைச்செயலர்கள்
மற்றும் முன்னணித்தோழர்கள் முனைப்புடன் செயல்பட்டு
கார்த்தியின் நிவாரண நிதிக்கு உதவிட வேண்டும்.
தோழமையுடன்
உதவிக்குழு உறுப்பினர்கள்
ஆர்.கே., பட்டாபி., சேது.. அசோகராஜன்... ஸ்ரீதர்.. மாரி..
====================================================
நிதி செலுத்தும் தோழர்கள்
NFTE BSNL TAMIL NADU CIRCLE
பெயரில் சென்னை அண்ணாசாலை
இந்தியன் வங்கிக்கணக்கு எண் 475298641ல்
செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
வங்கி IFSC எண் : IDIB000A089.
தோழர்.கார்த்தியின் மாத நிறைவு நினைவஞ்சலி
25/04/2016 அன்று புவனகிரியில் நடைபெறவுள்ளதால்
தோழர்கள் அதற்கு முன்னதாக தங்கள் பங்களிப்பைச் செய்திடுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் விவரங்களுக்கு
மாநிலப்பொருளர்
தோழர்.அசோகராஜன் அவர்களை
9486106797ல் தொடர்பு கொள்ளவும்
Monday, 7 March 2016
Wednesday, 17 February 2016
TMTCLU -வின் எழுச்சிமிகு செயற்குழு.
நமது தஞ்சை மாவட்ட TMTCLU செயற்குழு 25-01-2016 மாலை 5 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. 100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். செயற்குழுவை கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி தோழர்கள் முன்னின்று நடத்தினர்.
TMTCLU மற்றும் NFTE கிளைச் செயலர்கள் தங்களது பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன், நாடிமுத்து, R.K. ராஜேந்திரன், மாநிலத் துணைச் செயலர் தோழர். நடராஜன், கிள்ளி , T. பக்கிரிசாமி, சிவசிதம்பரம் ஆகியோர் நிலைமைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள். மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்துவதுதான் பிரச்சினை தீர்வுக்கு வழி என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
இறுதியில் மாநிலச் செயலர் தோழர். R. செல்வம் நிறைவுப் பேருரையாற்றினார். மாநிலச் சங்கத்தின் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நீதிமன்றம் போகப் போவதையும் அதற்கான காரணத்தையும் விளக்கமாகக் கூறினார். தீவிரமான போராட்டத்தை தஞ்சை மாவட்டம் நடத்திட வேண்டும். அதன் மூலம்தான் நாம் பல்வேறு மாற்றங்களை மாநிலம் முழுமைக்கும் கொண்டுவர இயலும் என்றார். உங்கள் போராட்டத்திற்கு மாநிலச் சங்கம் முழுமையாக துணை நிற்கும் என்றும் கூறினார்.
தஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக RTI யில் விளக்கம் கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
Wednesday, 10 February 2016
Thursday, 4 February 2016
காரைக்குடி செய்திகள்
ஒப்பந்த ஊழியர்
வைப்புநிதி நிரந்தர கணக்கு எண் ஒதுக்கீடு
EPF UAN - UNIVERSAL ACCOUNT NUMBER
ALLOTMENT
ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வைப்புநிதி எண் UAN வழங்கப்பட வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை.
தற்போது அலுவலக துப்புரவுப்பணிகளை HOUSE KEEPING
குத்தகை எடுத்துள்ள ALERT SECURITY என்ற குத்தகை நிறுவனம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு வைப்பு நிதி UAN ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது காரைக்குடி மாவட்டத்தில் இப்போதுதான் ஒரு குத்தகை நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக,
முதன் முறையாக வைப்புநிதியை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பெயரிலே செலுத்தியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
துப்புரவுப்பணிகள் தவிர காவல் பணி, கேபிள் பணி போன்ற பணி செய்யும் ஊழியர்களுக்கான UAN இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கான குத்தகைக்காரர்கள் வேறு வேறு ஆட்கள்
என்பதால் இந்நிலை நிலவுகிறது.
UAN ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு
EPF அலுவலகத்திலிருந்து குறுந்தகவல் SMS அனுப்பப்படும்.
EPF இணையதளத்தில் நிரந்தர வைப்புநிதி எண்ணை சம்பந்தப்பட்ட ஊழியரின் USER NAME - உபயோக பெயரில் சென்று
ACTIVATE - செயல்படுத்த வேண்டும்.
நமது கிளைச்செயலர்களும், கணிணியில் பணி புரியும் தோழர்களும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிட வேண்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் மாவட்டச்சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Subscribe to:
Posts (Atom)







