தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 4 November 2015

ஒப்பந்த ஊழியர் போனஸ் ஆர்ப்பாட்டம் 4-11-2015

அனைத்து ஒப்பந்த ஊழியருக்கும் போனஸ் வழங்கக்கோரி மாவட்டம் முழுவதும் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனடிப்படையில் இன்று நிர்வாக தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. NFTE சார்பில் மாவட்ட உதவிசெயலர் தோழர்.குழந்தைநாதன், TMTCLU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் முத்துவேல், BSNLEU மாவட்ட செயலர் தோழர் சம்பந்தம், மாநில துணைத்தலைவர் தோழர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில்,
ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி காண்ட்ராக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து ஒப்பந்த ஊழியரும் போனஸ்  பெற நிர்வாகமும் உத்தரவாதம் வழங்கியுள்ளது.  
நாமும் நிர்வாகத்திடம்  குறிப்பிட்ட தேதிக்குள் போனஸ் வழங்கப்படவில்லையெனில் திட்டமிட்டபடி 6- ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுமென தெளிவுபடுத்தியுள்ளோம்.  
கடலூரில் இதனை விளக்கி விளக்ககூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இரு சங்க மாநில,மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் தோழர்கள், மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதைப்போன்று மாவட்டம் முழுமையும் உள்ள கிளைகள் தோறும் கூட்டு ஆர்ப்பாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Tuesday, 3 November 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ்-சம்பளம்


 தோழர்களுக்கு வணக்கம்!
     நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் VDA (Variable Dearness Allowance) வை இணைத்து தரவேண்டுமென கார்பரேட் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்டையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆகவே மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என கவனிக்கவும்.

      மேலும் இந்த ஆண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் விரைவில் வழங்கப்பட வேண்டுமெனவும்  நிர்வாகத்தால் அந்த அந்த ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சில பகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மற்ற பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை. ஆகவே விரைவில் அனைவருக்கும் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தங்களது  மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தும்படி கேட்டுகொள்கிறேன்.
தோழமையுடன்
R.செல்வம்


மாநிலப்பொதுச்செயலர்-TMTCLU

Monday, 2 November 2015

ஆர்ப்பாட்டம்

ஒப்புக்கொண்டபடி போனஸ் தரகோரி
காலத்தே போனஸ் தந்திட வலியுறுத்தி
நியாயமான போனஸ் வலியுறுத்தி
பாலாஜி குத்தகை தாரரை வலியுறுத்தி 
4.11.2015 புதன் மாலை 5.30
GM (O) மெயின் தொலைபேசி நிலையம் -குடந்தை 
பொருத்தது போதுமென ... திரள்வோம் ...
போனஸ் பெறுவோம் !
தோழமையுடன் 
NFTE TMTCLU குடந்தை 



 
TMTCLU- சேலம் மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் 
பணி சிறக்க வாழ்த்துக்கள் 
மாவட்ட தலைவர்      : தோழர். N. சிவமோகன், CL , கே.என். பட்டி, சேலம்.

மாவட்ட து.தலைவர் : தோழர். S. கணேசன், TM, திருசெங்கோடு.
                                                   
மாவட்ட செயலர்        : தோழர். A. கந்தசாமி, TM, இளம்பிள்ளை.

மாவட்ட உ. செயலர் : தோழர். P. செல்வம், CL, நாமக்கல். 
                                            தோழர். K. பாலசுப்ரமணியன், Sr.TOA, GM(O), சேலம்.

மாவட்ட பொருளர்    : தோழர். G. செல்வராஜ், CL, குகை, சேலம்.

Friday, 30 October 2015

ஏஐடியூசியின் 95வது அமைப்பு தினம் அக்டோபர் 31

 
கூலிகள் என்றே கூப்பிடப் பட்டோம்,
தொழிலாளிகள் என்று எம் தலையை நிமிர்த்தாய்!
குனிந்து குறுகியே பழக்கப்பட்டிருந்தோம்,
நிமிரடா என்று எம் உடலை நிமிர்த்தாய்!
உழைப்பவன் கேட்பது பிச்சையே அல்ல,
உரிமையைக் கேளென எம் நெஞ்சம் நிமிர்த்தாய்!
வறுமையும் தாழ்வும் அழுக்குமாய் வாழ்ந்தோம்,
மனதைக் கழுவி எம் வாழ்வை நிமிர்த்தாய்!
அப்பன் வேலையே மகனுக் கென்றார்,
தப்பெனெச் சொல்லி எம் சந்ததி நிமிர்த்தாய்!
எத்தனை தூக்குகள், கத்திக்குத்து, அரிவாள் வெட்டுகள்,
ரத்தச்சேற்றிலும் எமைக் காக்கவே துடித்தாய்!
தொண்ணூற்றைந்து ஆண்டுகளாக எமைத் தூக்கிப்பிடிப்பவளே!
நீ எம் தந்தைக்குத் தந்தை!
தாய்க்கெல்லாம் தாய்!
நீடூழி வாழி நீ!

Wednesday, 28 October 2015

ஒப்பந்த ஊழியருக்கு அடையாள அட்டை , EPF  செலுத்தப்பட்ட அட்டை , மற்றும் ESI  வழங்கிட வலியுறுத்தி கார்ப்ரேட் அலுவலகம் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் வெளியிட்டுள்ளது .